25 Jul 2019

மட்டக்களப்பு பிராந்தியத்தில் விநியோகிக்கப்படும் நீரின் தரம்

SHARE
மட்டக்களப்பு பிராந்தியத்தில் விநியோகிக்கப்படும் நீரின் தரம்
(எம்.எஸ்.எம்.சறூக்)



மட்டக்களப்பு பிராந்தியத்தில் தற்போது தொடர் வரட்சியான காலநிலை நிலவுவதனால் இப்பிராந்தியத்திற்கு பிரதானமாக குடிநீரினை வழங்கும் உன்னிச்சை குளத்தினது நீர் மட்டம் வெகுவாக குறைவடைந்து வருகின்ற சூழலில், பாவனையாளர்களுக்கான நீரினை தொடர்ச்சியாக விநியோகித்து வரும் நிலையில் அதன்; தரம்பற்றிய பொதுமக்களின் குறைபாடுகள், கருத்துக்கள் கிடைக்கப் பெற்றுவருவதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் புதன்கிழமை (24) தெரிவித்துள்ளார்.  

தேசிய நீர் வழங்கல் சபையின் வவுணதீவு நீர் சுத்திகரிப்பு நிலையமானது இலங்கையின் தர நிர்ணயத்திற்கு (ளுடுளு) அமைய நீரினை சுத்திகரிக்கும், சர்வதேச தர நிர்ணய (ஐளுழு) சான்றிதழைப்பெற்ற, நவீன தொழில் நுட்பத்தில் இயங்கும் ஒரு நிலையமாகும். இங்கு தூய்மையாக்கப்படும் சுத்தமான நீர் தொடர்ச்சியான  கண்காணிப்பின் கீழ் மட்டக்களப்பு பிராந்தியத்தில் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. 

எனினும் நீரின் தரம்பற்றிய (நிறம், மனம்) முறைப்பாடுகள் பாவனையாளர்களிடம் இருப்பின் அதனை எமக்கு தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்வதோடு, அருந்துவதற்கு பொருத்தமான தரத்தினை கொண்ட நிலையிலேயே நீர் தொடர்ச்சியாக விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் பிராந்திய முகாமையாளர் மேலும் தெரிவித்தார். அத்துடன் தற்போதைய வரட்சியான காலநிலை தொடருமானால் செப்டம்பர் மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து நீர் துண்டிப்பினை அமுல்படுத்த வேண்டிய வரும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.   


SHARE

Author: verified_user

0 Comments: