3 Jun 2019

வைத்தியசாலையில் வசதிகளின்றி எத்தனையோ மக்கள் இறக்கின்றனர் - சத்திர சிகிச்சை நிபுணர் ரொகான்குமார்

SHARE
தெரியாத முடிவுக்காக நாங்கள் ஏங்கிக்கொண்டு இருக்கின்றோம். முடிவு வரும்போது நாங்கள் இருக்கமாட்டோம். வைத்தியசாலையில் வசதிகளின்றி எத்தனையோ மக்கள் இறக்கின்றனர். இது அவர்களின் உறவாக இருந்தால் நிலமை எவ்வாறு இருக்கும். என களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகரும் சத்திர சிகிச்சை நிபுணருமாகிய எஸ்.ரொகான்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு சுமார் முப்பத்தி ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான குருதியியல் பாகுப்பாயி இயந்திரத்தினை நன்கொடையாக கீஸ் இன்ரநெசினல் நிறுவனத்தினர் ஞாயிற்றுக்கிழமை (02) வழங்கியிருந்தனர். அதனை உத்தியயோக பூர்வமாக கையளிக்கும் நிகழ்வு வைத்தியசாலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் எஸ்.அருள்குமரன், கல்முனை பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்  ஜீ.சுகுணன் மற்றும் கீஸ் நிறுவனத்தினுடைய பணிப்பாளர் குமார் சுந்தரராஜ் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பிடைய தவிசாளர் இரா.சாணக்கியன் மற்றும் மண்முனை தென் எருவில் பற்று உதவி தவிசாளர் ரஞ்சினி கனகராசா மற்று பிரதே சபை உறுப்பினர்களான இளங்கோ, மே.வினோராஜ் வைத்தியசாலை நலன்புரிச் சங்கத்தினர், வைத்தியசாலை உத்தியோகஸ்த்தர்கள் எள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந் நிகழ்வினை தலமை தாங்கி  தலமையுரை ஆற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்….
அரசியல் எமது அடிப்படையாகும் நாங்கள் கொடுக்கும் வரிப்பணத்தில்தான் அனைத்து வேலைகளும் நடத்து கொண்டு இருக்கின்றன. அரசியல் இல்லாமல் நாங்கள் எதனையும் வென்றெடுக்க முடியாது. நாங்கள் வாக்கினை போட்டுள்ளோம் அதற்கு பின்னர் நாங்கள் தொழில் கொடுக்கமாட்டோம் அமைச்சு பதவி எடுக்கமாட்டோம் எனவும்  தெரியாத முடிவுக்காக நாங்கள் இன்று ஏங்கிக்கொண்டு இருக்கின்றோம். முடிவு வரும்போது நாங்கள் இருக்கமாட்டோம். இந்த வைத்தியாலையினை நம்பி எத்தனை இலட்சம் மக்கள் உள்ளனர். வைத்திய வசதிகள் இன்றி எத்தனை மக்கள் இறக்கின்றனர். இது அவர்களின் உறவாக இருந்தால் எவ்வாறு இருக்கும். இதுதான் உண்மை இதுதான் யதார்த்தம் இந்த விடயங்களில் நாங்கள் முன்னேற்றம் அடையவேண்டும் எங்களுக்கு விடுதலை தேவையில்லை இவ்வாறான சின்ன சின்ன விடயங்களில் நாங்கள் முதலில் விடுதலை எடுக்க வேண்டும்.

நாங்கள் களுவாஞ்சிகுடி வைத்தியசாலை  ஒரு இலட்சத்தி எண்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு   சுகாதார சேவையினை வழங்குகின்ற வைத்தியசாலையாக  காணப்படுகின்றது. ஆனால் இன்று நாங்கள் சேவையினை திருப்திகரமாக  செய்யமுடியாத நிலையில் காணப்படுகின்றோம். இதற்கு உண்மையான காரணம் நிருவாகம் இல்லை அரசியலாகும் நான் முன்னர் கடமையாற்றிய வைத்தியசாலையில் அரசியல்வாதிகள் வைத்தியசாலையினை முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் செயற்படுவதனை நான் அவதானித்தேன் ஆனால் அந்த நிலைiயானது இங்கு சிறிதளவேனும் காணமுடியாதுள்ளது.
அனைவரும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் நிலமையை கருத்தில் எடுக்கவேண்டும். இந்த தொகுதியினை பொறுத்தளவில் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையை விட்டால் சுமார் முப்பது கிலோமீற்றர் தூரத்திற்கு அப்பாலே அடுத்த வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும். ஆனால் ஏனைய பிரதேசங்களில் நிலமை அவ்வாறில்லை. எனவே இவ் வைத்தியசாலையில் வளங்கள் இருந்தால் மாத்திரமே நாங்கள் சேவையினை திருப்தியாக செய்யமுடியும். இல்லாது விடத்து எமது சேவையானது பூச்சியத்திற்கு சமமாகும்  இதுவே யதார்த்தமான உண்மையாகும்.

எனது இடமாற்றத்தினை இந்த வைத்தியசாலை சமூகமானது மிகுந்த சிரமப்பட்டு நிறுத்தியுள்ளனர். ஆகவே அவர்களுக்கு திருப்தியான சேவையினை வழங்கவேண்டிய கடைப்பாடு எனக்கு உள்ளது. இதனால்தான் இந்த விடயங்களை நான் கதைக்கின்றேன். நான் இங்குவரும் போது  சத்திரசிகிச்சை நிபுணருக்குரிய தேவை இந்த வைத்தியசாலையில் இல்லை என்று சொன்னார்கள். ஆனால் இங்கு வந்து ஆறு மாதங்களுக்குள்ளையே ஆயிரத்தி இருநூறுக்கும்  மேற்பட்ட சத்திரசிகிச்சைகளை நான் மேற்கொண்டுள்ளேன். எனவே கட்டாயமாக வைத்திய நிபுணர்களை கொண்டுவந்து இந்த வைத்தியசாலையை மேலும் உயர்த்த வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் ஆனேகமான ஆதாரவைத்தியசாலைகளுக்கு வைத்திய நிபுணர்கள் நியமிக்க முடியும்மென்றால் ஏன் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு வைத்திய நிபுணர்களை நியமிக்க முடியாது. இதற்கு காரணம் என்ன நாங்கள் மௌனமாக இருப்பதும் அரசியல்வாதிகளுமே இதற்கு காரணமாகும். இவர்கள் இறுக்கமாக உணர்வோடு செயற்பட்டால் மாத்திரமே இந்த வைத்தியசாலையானது மேன்மையடையுமே தவிர  வெறுமனே இவ்வாறு இருந்து கொண்டு செயற்படுவதனால் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை. எனவே இந்த வைத்தியசாலையின் வளர்ச்சிக்காக நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் எனம் பிரமாணத்தை இன்றே எடுத்து மேற்கொள்ள வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.SHARE

Author: verified_user

0 Comments: