6 Jun 2019

கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்திற்கான கட்டிடத்திற்கு அடிக்கல்

SHARE
கிழக்கு பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு, பிள்ளையாரடியில் சகல வசதிகளுடனும் அமைக்கப்படவுள்ள மருத்துவ சௌக்கிய பராமரிப்பு பீடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி இராகல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உயர்கல்வி அமைச்சின் செயலாளர் எம்.பி.கே.மாயாதுன்ன பிரதம அதிதியாக கலந்து அடிக்கல்லை நாட்டிவைத்தார்.
700 மில்லியன் ரூபாய் செலவில் மருத்துவபீடம் மற்றும் சௌக்கிய பராமரிப்ப பீடம், நிர்வாக கட்டிடம், மாணவர்கள் தங்குமிடம், விரிவுரையாளர்கள் தங்குமிடம், விளையாட்டு மைதானம் உட்பட அனைத்து வசதிகளையும் கொண்டதாக இந்த கட்டிட தொகுதி அமைக்கப்படவுள்ளது.
இதற்கான நிதியொதுக்கீட்டை உயர்கல்வி அமைச்சு வழங்கியுள்ளதுடன் இந்த கட்டிட தொகுதி இரண்டு வருடங்களுக்குள் நிறைவுசெய்யப்படவுள்ளது.
இந்த நிகழ்வில் உயர்கல்வி அமைச்சின் அதிகாரிகள், கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
உயர்கல்வித் துறைக்கான அபிவிருத்திக்காக அரசாங்கம் 15 பில்லியன் ரூபாயினை வரவு செலவு திட்டத்தின் ஊடாக ஒதுக்கீடுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




SHARE

Author: verified_user

0 Comments: