2 Jun 2019

அனைவருக்கும் நிழல் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட 195 ஆவது மாதிரிக் கிராமம் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

SHARE
அனைவருக்கும் நிழல் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட 195 ஆவது மாதிரிக் கிராமம் மக்களிடம் கையளிக்கப்பட்டது.
பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவின் கச்சைக் கொடி சுவாமிமலைப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 25 வீடுகளைக் கொண்ட கணபதிபுரம் கிராமம் வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிறேமதாசவினால் மக்களிடம் சனிக்கிழமை (01) கையளிக்கப்பட்டது.

அனைத்து அடிப்படை வசதிகளையும் கொண்ட இந்த கிராமத்திற்காக 220 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த நிகழ்வின்போது பலரிற்கு கடன் உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டது. இதன் போது வீடுகளை திறந்து வைத்த சஜித் பிறேமதாச அவர்கள் பின்ருமாறு கருத்து தெரிவித்திருந்தார்,

என்னைப் பற்றி சிந்திக்கும் யுகத்தை முடிவிற்கு கொண்டு வந்து உங்களைப் பற்றி சிந்திக்கும் யுகத்தை கொண்டு வருவதற்கு நான் தயார், குடும்பம் பற்றி சிந்திக்கும் யுகத்தை இல்லாதொழித்து இந்த நாட்டின் பிரஜைகள் தொடர்பில் சிந்திக்கும் யுகத்தை ஆரம்பிப்பிற்கு நாம் தயார் சுயனலமின்றி நாம் சிந்திக்க வேண்டும். சுய நல ஆட்சியை முடிவிற்குக் கொண்டு வந்து சுயநலமற்ற அரசாங்க யுகத்தை  கொண்டு வர நான் தயார். இந்த நாட்டின் சொத்துக்களையும் பொதுமக்களையும் தேவைகளுக்கு பயன்படுத்துவதற்கு நாம் தயார். எம்மைப் பற்றி சிந்திப்பதை இரண்டாம் கட்டமாக வைத்துவிட்டு நாடு குறித்து சிந்தித்து நாட்டின் பிரஜைகளையும் வெற்றியடைய செய்வதற்கு நாம் அனைவரும் ஒன்றினைவோம்.

என்னைப் பற்றி சிந்திக்கும் யுகத்தை முடிவிற்கு கொண்டு வந்து உங்களைப் பற்றி சிந்திக்கும் யுகத்தை கொண்டு வருவதற்கு நான் தயார் என மட்டக்களப்பில் நேற்றைய தினம் வீடுகளை திறந்து வைத்த சஜித் பிறேமதாச மக்கள் முன்னிலையில் தெரிவித்திருந்தார்.









SHARE

Author: verified_user

0 Comments: