29 May 2019

நாட்டில் சட்டத்தின் ஆட்சியை அமுல்ப்படுத்துவதில் இளைஞர் யுவதிகளின் வகிபாகம் மிகவும் பிரதான இடத்தை வகிக்கின்றது - நவேஸ்வரன்.

SHARE
நாட்டில் சட்டத்தின் ஆட்சியை அமுல்ப்படுத்துவதில் இளைஞர் யுவதிகளின் வகிபாகம் மிகவும் பிரதான இடத்தை வகிக்கின்றது. அரசியலமைப்பின் படி சட்டத்தின்பால் இளைஞர் யுவதிகளின் வகிபாகம் முக்கிய இடம் வகிக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் பல அமைப்புக்ள் இருக்கின்றன. ஆனாலும் இந்த அன்புக்கும் நட்புக்குமான இளைஞர் வலையமைப்பு ஒரு வித்தியாசமான நீண்ட தூர நோக்குடன் இளைஞர் யுவதிகளை முன்னிலைப்படுத்தி செயற்படுகின்றமை வரவேற்கத்தக்கதாகும். சட்டத்தின ஆட்சியை உறுதிப்படுத்தும் வகையில் சட்ட ஏற்பாடுகளுக்குமைய பல்வேறு சரத்துக்கள் உள்ளன. வெகுஜன ஊடகத்துறை,  மனித உரிமைகள், தகவலை அறிவதற்கான உரிமைகள், இவ்வாறான வாய்ப்புக்களை மக்களுக்குக் கொண்டு செல்வதற்கான களத்தையும், அதற்கான சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு இந்த நிலையம் உருவாக்கப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். என மட்டக்களப்பு கச்சேரியின் உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அன்புக்கும் நட்புக்குமான இளைஞர் வலையமைப்பு அமைப்பினால் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யவதிகளின் ஆளுமை விருத்தி மற்றும் நவீன தொழில் நுட்பத்தை விருத்தி செய்வதற்ககாக வேண்டி அதற்கான  காரியலயம் ஒன்று செவ்வாய்க்கிழமை (28) மட்டக்களப்பு கண்ணகியம்மன் கோயில் வீதியில் திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு கச்சேரியின் உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன், மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ஏ.சிம்.ஏ.அஸீஸ், அன்புக்கும் நட்புக்குமான இளைஞர் வலையமைப்பு அமைப்பின் பணிப்பாளர் ரவீந்திரடி சில்வா, மற்றும் றோயல் றெமான்ட், தேசிய சிறுவர் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர் எஸ்.பிரபாகரன்,  முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி.ர.கிரேஸ் யு.எஸ்.எயிட். திட்ட இணைப்பான கமலதாஸ், இளைஞர் யுவதிகள், உள்ளிட்ட கலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த மட்டக்களப்பு கச்சேரியின் உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன்…. தற்போது இந்நாட்டில் இருக்கின்ற சூழ்நிலையில் நல்லாட்சிப் பொறிமுறையில் நாட்டிலுள்ள சகல இன மக்களும் சகோதர இன மனாப்பாங்குடன் வாழ்வதற்கான, அரசாங்க பொறிமுறையை நாங்கள் அனைவரும் கட்டியெழுப்புவதற்கு இவ்வாறான அமைப்புக்களின் செயற்பாடுகளும் இன்றியமையாததாகும்.

மட்டக்களப்பு மாவட்ட அடிமட்ட மக்களு;ககுச் சென்றடைய வேண்டிய வெகுஜன ஊடகத்துறை, அரசாங்க சேவைப் பெறிமுறை, மக்களுக்கான நல்லாட்சிப் பெறிமுறையில் கிடைக்க வேண்டிய அனைத்து வரப்பிரசாதங்களையும், இளைஞர் யுவதிகள் அவர்களது களத்திற்குக் கொண்டு செல்வதற்கு இளைஞர் யுவதிகளுடாகவும் மக்களுக்குக் கொண்டு செல்லலாம் என நினைக்கின்றேன்.   

தற்போதில் பல்வேறு இனக் குழுமங்கள் கொண்ட இந்நாட்டில் தற்போது எமக்கு கிடைக்க வேண்டியது ஐக்கியமபன வாழ்க்கையும், சமாதானமான, நிலையேறான அபிவிருத்திச், செயற்பாடுகளுமேயாகும். இந்நிலையில் மக்கள் மத்தியில் சகோதரத்துவமும், சகவாழ்வும் கட்டியெழுப்பப்படல் வேண்டும். இவற்றுக்கு ஒரு நல்லிணக்கப் பெறிமுறையை இளைஞர்கள் ஊடாகக் கொண்டு செல்ல வேண்டும். அவற்றுக்காக பல அமைப்புக்கள் ரீதியிலும், அரசாங்கத்தின் மட்டங்களிலும் பல பொறிமுறைகள் எடுத்துச் செல்லப்படுகின்றன. வெகுஜன ஊடகத்துறையைச் சேர்த்துக்கொண்டு இளைஞர்களை அணித்திட்ட, வெளிப்படைத்தன்மையான செயற்பாடுகள் இடம்பெறல் வேண்டும். இந்நிலையிலும், செய்திகளும், பல வடிவங்களிலும். புல கூறுகளாகவும் வெளிவருகின்றன. இவ்வாறான செய்திகள் மக்களுக்கு வேறுவிதமான தூண்டுதல்களைக் கொடுக்கின்றன. எனவே அத்தகைய தூண்டுதல் சக்திகளை மறந்து, உண்மை நிலவரங்களையும், நாட்டு மக்களுக்கு எது தேவையோ அவற்றை ஊடகங்கள் வழங்க வேண்டும். 

சமூக மட்டத்தில் நல்லுறவுகள் கட்டியெழுப்பப்படல வேண்டும். இனக்குரோதங்கள் களையப்படல் வேண்டும். மக்கள் மத்தியில் காணப்படும் கசப்புணர்வுகள் அகற்றப்படல் வேண்டும். இவ்வாறு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இளைஞர் யுவதிகள் முன்மாதிரியாக செயற்பட வேண்டும். எனவே அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில் செயற்பட வேண்டும். எனவே சமூகத்தையும் முன்னேற்றி முழு நாட்டையும் முன்னேற்றுவதற்குரிய வாய்ப்பு இருக்கின்றது. வெறுமனே அபிவிருத்தியில் மட்டுமின்றி, உண்மையான சக வாழ்வும் கட்டியெழுப்பப்படல் வேண்டும். ஒவ்வொருவரின் வாழ்விற்கும் தேவையானது சமாதானமும் சகவாழ்வுமாகும். இவையனைத்திற்கும் வலுச்சேர்க்கின்றவர்களாக இளைஞர் யுவதிகள் திகழ வேண்டும் என அவர் தெரவித்தார்.



































SHARE

Author: verified_user

0 Comments: