8 May 2019

குண்டு வெடிப்பினால் மட்டக்களப்பில் அக்ஷய திதி நகை வியாபாரம் இம்முறை கழைகட்டவில்லை.

SHARE
குண்டு வெடிப்பினால் மட்டக்களப்பில் அக்ஷய திதி நகை வியாபாரம் இம்முறை கழைகட்டவில்லை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பை தொடர்ந்து வர்த்தக சமுகத்தினர் பெரிதும், பாதிப்படைந்துள்ளனர். பொது மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சம் காரணமாக நகரின் வியாபார நிலையங்கள் வியாபாரம் இம்முறை உற்சாகம் அற்ற நிலையில் காணப்படுகின்றன.

தமிழ் பேசும் மக்கள் அதிஸ்ட்டத்திற்குரிய நாளான இன்றைய செவ்வாய்க்கிழமை (07) அக்ஷய திதிக்குரிய நாளில் சகல தங்க நகை கொள்வனவு கடைகளில் வியாபாரம் களைகட்டவில்லை தங்க நகை வர்த்தர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட அசாதாரண சுழ்நிலை காரணமாக வியாபார நிலையங்களில் மிகவும் அமைதியான நிலையில் காணக்கூடியதாகவுள்ளது.
இதேவேளை மக்கள் செவ்வாய்கிழமை அட்சய திருதியை முன்னிட்டு தமது இல்லங்களில் செல்வம் பெருக வேண்டி தங்க கொள்வனவில்  ஈடுபட்டு வருகின்றனர். 

மட்டக்களப்பு மாவட்டத்திலும் சகல தங்;க நகை கடைகளிலும் செவ்வாய்க்கிழமை அட்ஷய திருதி வியாபாரம் மந்தமான நிலையில் இடம் பெற்றன. 

அட்ஷய திருதியில் தங்கம் வாங்க சிறந்த தினமென பண்டைய காலம் தொடக்கம் தமிழர்களிடையே நம்பிக்கை நிலவி வருகிறது. வசதி குறைந்த மக்கள் இந்நாளில் அதிட்ட லட்சுமி காடஞ்சம் தங்கள் இல்லங்களில் நிரந்தரமாக இருக்க வேண்டி காலை கடையில் இருந்து மங்கலப்பொருட்களான மஞ்சள் உப்பு கற்கண்டு பசும்பால் நெய்வேத்தியம் வைத்து வழிபடுகின்றமை குறிப்பிடதக்கது.  











SHARE

Author: verified_user

0 Comments: