6 May 2019

பாடசாலைகள் இரண்டாம் தவணை கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மீள ஆரம்பம் - மாணவர்களின் வரவு குறைவு

SHARE
பாடசாலைகள் பலத்த பொலிஸ். மற்றும் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் திங்கட்கிழமை(06) மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முதலாம் தவணைக்கான  அனைத்து கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளும் கடந்த 2019.04.05 ஆம் திகதியுடன் நிறைவு பெற்று அன்றயத்தினம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தன. மீள இரண்டாம் தவணைக் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு கடந்த 2019.04.22 ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்படவிருந்தது.
இந்நிலையில் 2019.04.21 ஆம் திகதி மட்டக்களப்பு உள்ளிட்ட பல இடங்களில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் தற்கொலைத் தாக்குதல் நடாத்தப்பட்டதைத் தொடர்ந்து நாட்டடில் ஒருவித அச்ச சூழல் நிலமை நிலவி வருகின்றது. பெற்றோர் தமது பிள்ளைகளை பகுதி நேரகற்றலுக்குக்கூட அனுப்பாமல் வைத்திருக்கின்ற இநிலையில் கடந்த 2019.04.22 ஆரம்பிக்கப்படவிருந்த இரண்டாத் தவணைக்கான பாடசாலை கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளை அரசாங்கம் 2019.05.06 ஆம் திகதி வரை ஒத்தி வைத்திருந்தது. 

ஆனாலும் திங்கட்கிழமை(06) ஆறாம் ஆம் தரத்திலிருந்து உயர்தரம் வரையிலான மாணவர்களுக்குரிய கற்றல் நடவடிக்கைகளே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏனைய முதலாம் தரத்திலிருந்த 5 ஆம் தரம் வரையிலான கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் 13 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. 

அதற்கிணங்க பாடசாலைகள், பாடசாலைச் சூழல் என்பன ஞாயிற்றுக்கிழமை (05) பொலிசார், மற்றும் இராணுவத்தினரால், பரிசோதனைக்குட்பட்டிருந்தன. பின்னர், பாடசாலைகளின் பாழையமாணவர்கள், பெற்றார்கள், ஆசியரியர்கள், கல்விச் சமூகத்தினர் இணைந்து விழிப்புக்குழுக்களையும், பாதுகாப்புக்குழுக்களையும், அமைத்துள்ளனர். 

இந்நிலையில் திங்கட்கிழமை (06) பொலிசார், இராணுவத்தினரது பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்போது மாணவர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊரியர்களினதும் பைகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே பாடசாலைகளுக்குள் உள்னுளைய அனுமதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. எனினும் பாடசாலை ஆரம்பநாளான இன்றயத்தினம் மாவணவர்களின் வரவு மிக மிகக் குறைந்தளவே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.














SHARE

Author: verified_user

0 Comments: