4 May 2019

கிழக்கு மாகாணத்தில் திங்கட்கிழமை காலை 8.00 மணிக்கு பாடசாலைகள் தொடங்க அனுமதி இல்லை வழமையாக சரியாக 7.30 இற்கே சகல பாடசாலைகளும் ஆரம்பிக்கப்படும் - மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர்.

SHARE
கிழக்கு மாகாணத்தில் திங்கட்கிழமை (06) காலை 8.00 மணிக்கு பாடசாலைகள் தொடங்க அனுமதி இல்லையெனவும் வழமையாக சரியாக 7.30க்கு சகல பாடசாலைகளும் ஆரம்பிக்கப்படும் என மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் சனிக்கிழமை(04) மாலை தெரிவித்தார்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளால் பாடசாலைகளை காலை 7.30 மணிக்கு தொடங்குவதில் உள்ள சிக்கல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு கிழக்கு மாகாணப் பாடசாலைகளை காலை 8.00 மணிக்கு தொடங்க அனுமதி வழங்கப்பட்டதாக வெளியான செய்தி ஒன்று வெளியியாகியிருந்தது, அந்த செய்தி உண்மைக்குப் புறம்பானதாகும். ஆச்செய்திக்கு விளக்கமளிக்கும் முகமாகவே இவ்விளக்கத்தை அவர் தெரிவித்தார். இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்… கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளும் சரியாக காலை வழக்கமான நேரத்திற்கு 7.30  ஆரம்பிக்கப்பட்டு வழமையாக பிற்பகல் 1.30 மணிக்கு பாடசாலைகள் நிறைவுறும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளால் பாடசாலைகளைத் தொடங்குதல் தொடர்பாக ஏராளமான அதிபர்கள், ஆசிரியர்களின் கருத்துக்கள் கண்டறியப்பட்டு இவ்விடயம் தொடர்பாக கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளரின் கவனத்திற்கு  கொண்டுவரப்பட்டதாகவும்,

இதில் பாதுகாப்புப் படையினரின் சோதனை நடவடிக்கைகளால் மாணவர்களின் போக்குவரத்து, அதிபர்கள், ஆசிரியர்களின் போக்குவரத்தில் ஏற்படும் தாமதம் என்பன சுட்டிக்காட்டப்பட்டதாகவும், இதனால் பாடசாலைகளை காலை 8.00 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 2.00 மணிக்கு நிறைவு செய்வதற்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகின்ற செய்தியானது உண்மைக்குப் புறம்பானது, இதனை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் நம்பவேண்டாம்.

இவ்விடயம் தொடர்பாக மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளின் அதிபர்கள் கவனமாக நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதோடு அதாவது மாகாணத்தில் உள்ள சில பாடசாலைகளின் நிலைப்பாடு அறிந்து அவற்றுக்குரிய பாடசாலையின் அபிவிருத்தி சங்கம் பாடசாலையை 8.00 மணிக்கு ஆரம்பிப்பதற்கு தீர்மானம் பெறப்பட்டால் மாத்திரம் அதனை உறுதிப்படுத்துவதோடு இத்தேவையை  வலயக்கல்வி பணிப்பாளர் அவசியம் என உணரப்படும் பட்சத்தில்தான்  மாகாண கல்வி திணைக்களம் சிபாரிசு செய்து கொடுக்க முடியும்.

ஆனால் அது எல்லாப் பாடசாலைகளுக்கும் பொருத்தமில்லை என மாகாண கல்விப்பணிப்பாளர் சுட்டிக்காட்டுவதோடு தேவையேற்பட்டால் மாத்திரம்  பாடசாலையின் அதிபர்கள் அந்தந்த வலயக் கல்விப் பணிப்பாளர்களிடம்  சிபாரிசு பெற்றுக்கொண்டு மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு இது பற்றி அறியத்தருமாறும் கேட்டுக் கொண்டார். இது ஒரு தற்காலிக ஏற்பாடகவே கையாள வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: