22 Apr 2019

களுவாஞ்சிகுடி பிரதேசம் எங்கும் வெள்ளைக்கொடி பறக்கவிடப்பட்டு துக்கதினம் அனுஸ்ட்டிப்பு.

SHARE
ஞாயிற்றுக்கிழமை (21) மட்டக்களப்பு மற்றும் கொழும்பு உள்ளிட்ட  பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும்முகமாக களுவாஞ்சிகுடி பிரதேசம் எங்கும், வெள்ளைக்கொடி பறப்பவிடப்பட்டு துக்கதினம் அனுஸ்ட்டிக்கப்படுகின்றது.  களுவாஞ்சிகுடி பிரதேசம், மற்றும் படுவாங்கரைப் பகுதியில் அமைந்துள்ள அனைத்துக் கடைத் தொகுதிகளும், சிறு வர்த்த நிலையங்களும் பூட்டப்பட்டு, வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டு துக்கதினம் அனுஸ்ட்டிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அரச மற்றும், தனியார், வங்கிகளும், பூட்டப்பட்டுள்ளதையும், வீதிகளில் மக்கள் நடமாட்டம் மிக, மிகக், குறைந்தளவானவர்களே நடமாடித் திரிவைதையும் அவதானிக்க முடிகின்றது. 

ஒருசில தூர இடங்களுக்கு மாத்திரம், இலங்கைப் போக்குவரத்திற்குச் சொந்தமான பேரூந்துகளும், மற்றும் தனியார் போக்குவரத்துக்கள், இடம்பெறும் இந்நிலையில் அப்போரூந்துகளில் பயணிகளின் எண்ணிக்கைகளும், குறைகாக உள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. 

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மிலேச்சத்தனமான தாக்குதலை தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும், இவ்வாறு இலங்கைளில் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற சம்பவத்தைக் கண்டித்தும், உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக எனது வேண்டுகோளுக்கிணங்க திங்கட்கிழமை களுவாஞ்சிகுடி பகுதியில் அமைந்துள்ள அனைத்து வர்த்தகர்களும், தங்களது கடைகளை மூடி வெள்ளைக் கொடி பறக்கவிடப்பட்டு துக்கதினம் அனுஸ்ட்டித்து வருவதாகவும், இந்த துக்க தினத்தை அனுஸ்ட்டிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றியத் தெரிவித்துக் கொள்வதாகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தரம் விநோராஜ் தெரிவித்தார். 

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு நகர், காத்தான்குடி, ஏறாவூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும், திங்கட் கிழமை வர்த்தக நிலையங்கள் எதுவும் திறக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

















SHARE

Author: verified_user

0 Comments: