23 Apr 2019

மட்டக்களப்பு செயலகத்தில் நடைபெற்ற தேசிய துக்கதினம் நினைவு

SHARE
மட்டக்களப்பில் கடந்த ஞாயிற்று கிழமை நடந்த தற்கொலை குண்டுதாக்குதலில் உயீர்நிர்த்த  உறவினர்களுக்கான மௌன அஞ்சலி நிகழ்வு செவ்வாய்கிழமை (23) காலை 8.45 மணிக்கு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. 
ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேனவின் பணிப்புரைக்கமைவாக செவ்வாய்கிழமை நாடெங்கும் அனுஸ்டிக்கப்படும் நிலையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் அணைவரும் மெழுகுவர்த்தி ஏந்தியநிலையில் மௌன அஞ்சலி மூன்று நிமிடங்கள் மனம் கனத்த நிலையில் அஞ்சலி செலுத்தியமை மனதை நெகிழவைத்தது. 

நடந்த தும்பியல் சம்பவத்தில் உயிர்நித்த உறவுகளுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் இந்து மதத்தலைவரான ஜெகதீஸ்வரக்குருக்கள் இரங்கல் உரையாற்றினார் அது போன்று கிரிஸ்தவ மதத்தலைவர் அவர்கள் மறைந்தவர்களின் உறைவினர்களின் மனங்களை தைரியப்படுத்திக்கொள்ள வேண்டி இறைவளிபாட்டினையும் இரங்கல் செய்தியினையும் வழங்கினார். 

மாவட்டத்தில் ஏற்பட்ட துற்பாக்கியமான நிலவரங்கள் இனியும் எமது மாவட்டத்தில் நடைபெறாமல் இருக்க இறைவன் அருள்கொள்ளவேன்டும் என மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான மாணிக்கம் உதயகுமார் வேண்டிக்கொன்டார்.

தொடர்ந்து உரையாற்றுகையில் வைத்தியசாலை உழியர்களின் பணியை பாரட்டியதோடு மாவட்டத்தின் இளைஞர்கள் முனைப்போடு செயல்ப்பட்டனர் அதுபோன்று மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பணிகளையும் பாரட்டினார் அனைத்து உத்தியோகத்தர்களும் இவ்வாறன அனர்த்தின் போது முனைப்போடு செயல்ப்பட்டு பாதிக்ககப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்க முன்வரவேண்டும்;
மாவட்ட செயலக ஆலயத்தில் ஆத்மசாந்தி பூசைகளும் நடைபெற்றது.   






SHARE

Author: verified_user

0 Comments: