30 Apr 2019

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட குழுவினர் மட்டக்களப்பு விஜயம், குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் குறித்து ஆய்வு

SHARE
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட குழுவினர் மட்டக்களப்பு விஜயம், குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் குறித்து ஆய்வு.
இலங்கச் செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கைக்கான தலைவர் ஜெகத் அபேசிங்க, மற்றும் பணிப்பாளர் நாயகம் மகேஷ் குணசேகர உள்ளிட்ட குழுவினர் செவ்வாய்கிழமை(30) மட்டக்களப்புக்கு விஜயம் செய்திருந்தனர். இக்குழுவில் இலங்கச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக்கிளைத் தலைவர் த.வசந்தராசா, செயலாளர் சா.மதிசுதன், கிளைநிறைவேற்று உத்தியோகஸ்த்தர் வி.பிறேமகுமார், உற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தி மட்டக்களப்புக் கிளைக் காரியாலயத்தில் மாவட்ட நிருவாகத்தினர், தொண்டர்கள், உள்ளிட்டோரைச் சந்தித்து மாவட்டத்தின் நிலமை குறித்து ஆராய்ந்தனர்.  

கடந்த 21.04.2019 அன்று மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலக் குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டட குடும்பஸ்த்தினர், உயிரிழந்தவர்களின் உறவினர்கள், ஆகியோரைச் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அவர்களுக்குத் தேவையான விடையங்கள் குறித்தும் கேட்டறிந்து கொண்டனர்.

மேலும் இக்குழு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்து வைத்தியசாலைப் பணிப்பாரிடம் காயப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்து கொண்டதுடன், சியோன் தேவாலய தலைமைப் போதகர் றொசான் அடிகாளாரையும் சந்தித்து, தற்போதைய நிலமைகள் குறித்துக் ஆராய்ந்தனர்.

தாற்கொலைக் குண்டுத்தாக்குதலின்போது குடும்பத்தில் உழைப்பழிகளை இழந்த குடும்பங்களுக்கு வாழவாதார உதவிகளையும். அவர்களது பிள்ளைகளின் கல்விக்கு உரிய உதவிகளும்,  உளவளத்துணை ஆலோசனைகளும்,  சியோன் தேவாலயத்தின் நிருவாகத்தின், ஆலோசனையுடனும், ஒத்துழைப்புடனும், குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மேற்கொள்ளவுள்ளதாக இலங்கச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைத் தலைவர் த.வசந்தராசா இதன்போது தெரிவித்தார்.















SHARE

Author: verified_user

0 Comments: