23 Apr 2019

மட்டக்களப்பு மாவட்டத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாப்பது சம்பந்தமான கூட்டம்

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாப்பது சம்பந்தமான கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில் செவ்வாய்க்கிழமை (23) பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள், மதத்தலங்கள், அரசாங்க திணைக்களம், அரசார்பற்ற நிறுவனங்கள், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், மாவட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கும் தாங்கிகள், குடிநீரை பெற்றுக்கொள்ளும் மாவட்டத்திலுள்ள குளங்கள், நீர்நிலைகளின் பாதுகாப்பு தொடர்பாக விஷேட கவனம் செலுத்தப்பட்டு ஆராயப்பட்டன.

இறுதியில் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பொலிஸ் உயர் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் உயரதிகாரிகள் மத்தியில் பாதுகாப்பு வழங்குவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவான் மெண்டீஸ், மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.எம்.ஜீ.டீ. தீகாவத்துர, இராணுவ பொறுப்பதிகாரி டவூல்யூ.ஜீ.ஐ.எஸ்.கமகே, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சதர்ஷினி ஸ்ரீகாந்த், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி, அனர்த்த முகாமைத்துவ மாவட்ட உதவிபணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத், மாவட்ட உத்தியோகஸ்தர்கள், என பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.



SHARE

Author: verified_user

0 Comments: