9 Apr 2019

நாட்டுக்காக ஒன்றிணைவோம் எனும் வேலைத்திட்டத்திற்கா 200.5 மில்லியன் ரூபா ஐந்துநாள் வேலைத்திட்டத்திற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்.

SHARE
நாட்டுக்காக ஒன்றிணைவோம் எனும் வேலைத்திட்டத்திற்கா 200.5 மில்லியன் ரூபா ஐந்துநாள் வேலைத்திட்டத்திற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்.
“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” வேலைத்திட்ட முதல்நாள் நிகழ்வு திங்கட்கிழமை(8) ஆரம்பமானது. இவ்வேலைக்கான முன்னேற்ற மீளாய்வு அறிக்கையையினை ஊடகங்களுக்கு  தெரியப்படுத்தும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில் திங்கட்கிழமை (8) மாலை 5.30 மணியளவில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. 

இவ் ஊடக மாநாட்டில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி, ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்  கலந்து கொண்டார்கள்.

இதன்போது அரசாங்க அதிபர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்… ஜனாதிபதியின் ஸ்திரமான நாட்டை கட்டியெழுப்புவதற்கான “நாட்டிற்காக ஒன்றிணைவோம்” வேலைத்திட்டமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவுகளையும் சேர்ந்த 161 கிராமங்களில் 1115 வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. முதல்நாள் 149 வேலைகள் திட்டமிடப்பட்டுள்ள போதிலும் 138 வேலைகள் முற்றுப்பெற்றுள்ளது. இவ்வேலைகளினால் 23920 பொதுமக்கள் நன்மையடைந்துள்ளதுடன் 1.72 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டங்களை  ஜனாதிபதி செயலணி, வரிசை அமைச்சுக்கள், திணைக்களங்கள், கிழக்கு மாகாணசபை, பிரதேச செயலகங்கள், அதிகாரசபைகள் போன்றவற்றின் பங்களிப்புடன் மாவட்டத்தில் நடைபெற்று வருகின்றன.

ஜனாதிபதி செயலகத்தினால் 16 வேலைத்திட்டங்களும், கிழக்கு மாகாண சபையினால் 13 வேலைத்திட்டங்களும், வரிசை அமைச்சினால் 109 வேலைத்திட்டங்களும், கிராமசக்தியினால் 2 வேலைத்திட்டங்களும், தேசிய சுற்றாடல் பிரச்சனைகள் சம்பந்தமாக 44 வேலைத்திட்டங்களும், போதைப்பொருள் சம்பந்தமாக தெளிவூட்டல் 21 வேலைத்திட்டமும், கிட்னி பிரச்சனை 4 வேலைத்திட்டங்களும், சிறுவர் பாதுகாப்பு விடயங்கள் சம்பந்தமாக 14 வேலைத்திட்டங்களும், நிலையான கல்வி அபிவிருத்தி சம்பந்தமாக 2 வேலைத்திட்டங்களும், ஸ்மாட் ஸ்ரீலங்கா போன்றன நடைபெற்று முற்றுப்பெற்றுள்ளது.

போதைப்பொருள் கட்டுப்படுத்தல் வேலைத்திட்டத்தின் பிரகாரம் மாவட்டத்தில் கசிப்பு உற்பத்திகளை சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்பட்ட 3 கசிப்பு உற்பத்தி நிலையங்களை முற்றுகையிட்டு கசிப்பு காய்ச்சிய 3 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒரு கிராமத்தை போதையில் இருந்து விடுவித்து போதையற்ற கிராமமாக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இதன் பிரகாரம் வடமுனையில் உள்ள ஓமடியாமடு கிராமம் போதையிலிருந்து விடுவிப்பதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டுக்காக ஒன்றிணைவோம் எனும் வேலைத்திட்டத்திற்கா 200.5 மில்லியன் ரூபா ஐந்துநாள் வேலைத்திட்டத்திற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனத்தெரிவித்தார். 

SHARE

Author: verified_user

0 Comments: