22 Apr 2019

குண்டு வெடிப்பில் பலியான 15 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு- நகரில் பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது.

SHARE
ஞாயிற்றுக்கிழமை மட்டு நகரில் அமைந்துள்ள சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியான 15 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை மற்றும் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் நல்லடக்கத்திற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. 
இதேவேளை மட்டு வைத்தியசாலையில் இரத்த தட்டுப்பாடு ஏனைய மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மற்றும் பதுளை அம்பாறை பொலனறுவை திருமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து மேலதிக வைத்தியரகள்; பிரேத பரிசோதனை வைத்திய அதிகாரிகள் அத்தியாவசிய மருந்துகள் என்பன வரவழைக்கப்பட்டு துரிதமாக பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. 

இதேவேளை மட்டக்களப்பு நகரின் பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளதுடன் குண்டுவெடிப்பு இடம்பெற்ற பகுதியில் வீதித் தடைகள் போடப்பட்டுள்ளதுடன் அருகிலுள்ள அயலவர்கள் தமது உறவினர் வீடுகளுக்கு இடம்பெயர்ந்து செலவதை காணகூடியதாஉள்ளது. 

நகரில் உயிரிழந்தவர்களின் அஞ்சலி வெலுத்தும் முகமாக வெள்ளை கொடிகள் பறக்கவிடபட்டுள்ளதுடன் மட்டு வைத்திய சாலையின் பாதுகாப்பும் பலப்படுத்தபபட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உடலங்களை துரிதமாக உறவினர்களிடம் ஒப்படைக்க மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். 

இதேவேளை உயிரிழந்தவர்களின் உடல்கள் மக்கள் அஞ்சலிக்காக அவர்களது இல்லங்களில் வைக்கப்பட்டுள்ளதுடன் இறந்தவர்களுக்கு அதிகளவான மக்கள் அஞ்சலி செலுத்துவதை காணக்கூடியதாவுள்ளது.   

SHARE

Author: verified_user

0 Comments: