17 Mar 2019

சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்பட்ட மான் இறைச்சியை களுவாஞ்சிகுடி பொலிசார் கைப்பற்றினர்.

SHARE
சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்பட்ட மான் இறைச்சியை களுவாஞ்சிகுடி பொலிசார் கைப்பற்றினர்.
சட்டவிரோதமான முறையில் கொண்டு சென்ற மான் இறைச்சியைக் களுவாஞ்சிகுடி பொலிசார் சனிக்கிழமை (16) மாலை கைப்பற்றியுள்ளதுடன், அதனை கொண்டு சென்றவரையும் பொலிசார் சந்தேகத்தின் பொலில் கைது  செய்துள்ளதாக ஞாயிற்றுக் கிழமை (17) தெரிவித்ததனர்

வாகரைப் பகுதியிலிருந்து களுவாஞ்சிகுடிப் பிரதேசத்திற்கு பை ஒன்றில்  சட்டவிரோதமான முறையில் மறைத்து வைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் ஒருவர் மான் இறைச்சியைக் கொண்டு சென்றுள்ளனர். சந்தேகத்திற்கிடமான குறித்த நபரை பட்டிருப்பு பாலத்தில் வைத்து நிறுத்தி சோதனையிட்ட களுவாஞ்சிகுடி பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் குறித்த நபரிடமிருந்த பையிலிருந்து 22 கிலோ 350 கிராம் மான் இறைச்சி கண்டு பிடிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த நபரை பொலிசார் கைது செய்துள்ளதுடன் இறைச்சியையும் கைப்பற்றியுள்ளனர். மேலும் குறித்த நபர் சாரதி அனுமதிப்பத்திரமின்றி மோட்டார் சைக்கிள் செறுத்தி வந்துள்ளதாகவும், பொலிசார் தெரிவித்தனர்.

இறைச்சி, மற்றும்; சந்தேக நபரையும் நீதிமன்றில ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச்சோதனை நடவடிக்கையில் களுவாஞ்சிகுடி பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பரிசோதகர் அஜித் சரச்சந்திர தலைமையில், பிரபாத் (5050), பண்டாரா (66466) , ஆகிய பொலிஸ் குழுவினர் ஈடுபட்டிருந்தனர். இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.





SHARE

Author: verified_user

0 Comments: