10 Feb 2019

மட்டக்களப்பு இளைஞர்களுடனான மர நடுகையும் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வும்.

SHARE
மட்டக்களப்பு இளைஞர்களுடனான மர நடுகையும் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வும்.
ஒரு தனி மரம் ஆண்டுக்கு 260 பவுண்டுகள் ஒட்சிசனை வெளியிடுகிறது. இது இரண்டு மனிதர்கள் ஒரு வருடம் சுவாசிக்க போதுமானதாகும். ஒரு கணக்கீட்டின்படி ஐம்பது வருடங்கள் வாழும் “ஒரு மரம்” உற்பத்தி செய்யும் ஒட்சிசனை மதிப்பு  30,000 டொலர், சுத்திகரிக்கும் நீரின் மதிப்பு  35,000 டொலர், மற்றும் கார்பன் வடிகட்டுவதற்கான செலவில் 1,25,000 டொலர், அரசாங்கங்கள் நீரை சுத்திகரிக்கவும், கார்பன் வெளியேற்றத்தை குறைக்கவும் பல பில்லியன் டொலர்களைச் செலவிடுகின்றன! இவை அனைத்தையும் மரங்கள் இலவசமாகவே செய்து வருகின்றன.

இவ்வாறு மரங்கள் பெறுமதியில் பார்ப்போமானால் அவற்றை கணக்கிட முடியாது. மரம் நடவேண்டும் என்ற நல்ல இயல்பான சிந்தனை எல்லோரிடமும் இருப்பதில்லை. ஆனால் இந்த மனப்பாங்கு இப்போ அதிகம் இளைஞர்களிடையே  வளரத்தொடங்கியமையை வரவேற்க வேண்டும்.

அந்தவகையில் மட்டக்களப்பு ஐ கொமுனிட்டி இளைஞர்களுடன் இணைந்து சமுக ஆர்வலர் சி.தணிகசீலன் அவர்கள் ஒரு தொகை மதுரை மரங்களை மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் வியாழக்கிழமை (31) நட்டு ஆரம்பித்து வைத்தனர். இதில் வானிலை அவதான நிலையத்தின் அதிகாரி சூரியகுமார் அவர்களும் கலந்துகொண்டு மரங்களை நட்டு இளைஞர்களுடன் இணைந்து ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது. 

சி.தணிகசீலன் இந்த நிகழ்வு பற்றிக் குறிப்பிடுகையில் “எமது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பெறுமதியான பல மரங்கள் அழிவடைந்துள்ளன. அதனால் எமது எதிர்காலச் சந்ததியினர் பல அவலங்களை எதிர்கொள்ளாமல் இருக்க நாம் அனைவரும் இணைந்து இழந்த மரங்களை நட்டு எமது சந்ததியினை நாமே பாதுகாக்க முன்னுதாரணமாக இருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டதுடன் “இன்னும் இதுபோன்ற நல்ல பணிகளை செய்ய இதுபோன்ற இளைஞர்கள் முன்வரவேண்டும்” எனவும் குறிப்பிட்டார்.

இந்த ஐ கொமினிட்டியின் உறுப்பினர்கள் இதுவரை இரண்டு இலட்சம் மரங்களை நட்டுள்ளதுடன் அவற்றை ஜி ஐ எஸ் மூலம் கண்காணித்து ஒரு புதிய புரட்சியை செய்து வருகின்றமை பாராட்டத்தக்கது.







SHARE

Author: verified_user

0 Comments: