11 Feb 2019

கனேடிய உலகப் பல்கலைக்கழக சேவை நிறுவனத்தின் 5 வருட கால இளைஞர், யுவதிகளிற்கான திறன் விருத்தி மூலம் தொழிலை ஏற்படுத்தும் திட்டம்.

SHARE
கனேடிய உலகப் பல்கலைக்கழக சேவை நிறுவனத்தின் 5 வருட கால இளைஞர், யுவதிகளிற்கான திறன் விருத்தி மூலம் தொழிலை ஏற்படுத்தும் திட்டம்.
கனேடிய உலகப் பல்கலைக்கழக சேவை WUSC நிறுவனத்தின் 5 வருட கால இளைஞர், யுவதிகளிற்கான திறன் விருத்தி மூலம் தொழிலை ஏற்படுத்தும் திட்டம் - ASSETமுடிவுற்ற நிலையில் இத் திட்டங்களின் அடைவினை ஆய்வு செய்யும் வகையில் புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கை நாட்டுக்கான பணிப்பாளர் டக் அவர்கள் மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். 

அந்த வகையில் நிறுவனத்துடன் கடந்த 3 வருடங்களாக இளைஞர்களிற்கான பயிற்சியினை வழங்கும் சேவையினை சிறப்பாக நடைமுறைப்படுத்திய விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரிக்கான தனது விஜயத்தினை கிழக்கு மாகாணத்திற்கான அணித்தலைவர் எஸ்.யோகேஸ்வரன் அவர்களுடன் ஞாயிற்றுக்கிழமை (10) மேற்கொண்டார். அங்கு தற்போது பயிற்சிபெறும் பயிலுனர்களின் செயற்பாடுகளை பார்வையிட்டதுடன் கல்லூரி பணியாளர்களுடன் திட்டம் பற்றிய கலந்துரையாடலினை மேற்கொண்டார். 

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் பயிற்சிபெற்ற 65 வீதம் பயிலுனர்கள் தற்போது தொழில் இருப்பதாகவும், இன்னும் சிலர் உயர் கற்கைநெறியினை தொடர்கின்றனர் என்றும், இதற்கு WUSC நிறுவனம் பயிற்சியுடன் மாணவர்களின் இயலுமை விருத்தி செயற்பாடுகளை அதிகளவு வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்தியமை மிகவும் முக்கிய காரணம் என்றும் அத்தோடு தற்போது தொழில்வழிகாட்டல் ஆலோசனை பிரிவினை ஆரம்பித்திருப்பதாகவும், இதன் மூலம் பயிற்சிபெறும் மாணவர்களின் இயலுமை விருத்தி மற்றும் தலைமைத்துவ பண்புகளை வலுப்படுத்துவதோடு, பிரதேசங்களில் உள்ள இளைஞர், யுவதிகளிற்கு விழிப்புணர்வு செயற்பாடுகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் கல்லூரியின் பணிப்பாளர் க.பிரதீஸ்பரன் இதன்போது தெரிவித்தார்.










SHARE

Author: verified_user

0 Comments: