24 Jan 2019

பண்டாரியாவெளி நாமகள் வித்தியாலயத்தில் நடைபெற்ற போதைப் பொருள் தடுப்பு வாரம்.

SHARE
போதைப் பொருள் தடுப்பு பாடசாலை வாரத்தை முன்னிட்டு மட்.மமே.பண்டாரியாவெளி நாமகள் வித்தியாலயத்தில் வியாழக்கிழமை (24) அப்பாடசாலை மாணவர்களுக்கும். பேற்றோருக்குமான விழிப்புணர்வு  நிகழ்வொன்று இடம்பெற்றது.
மட்.மமே.பண்டாரியாவெளி நாமகள் வித்தியாலயத்தியாலய அதிபர் மூ.சிவகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுயாதீன ஊடகவியலாளர் வ.சக்திவேல் வளவாளராகக் கலந்து கொண்டு விளக்கங்களை வழங்கினார். 

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…….

நமது சமூதாயம் தற்போதைய காலகட்டத்தில் கல்வியில் முன்னேற வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதற்கு குடும்பத் தலைவர்கள் மதுபோதைக்குட்படுவதனால் மாணவர்களின் கற்றலுக்கு பெரும் தடையாக இருந்து வருகின்றது. வறுமை, வறுமை, என நமது பெற்றோர்கள் கூறினாலும் வறுமை வேளையிலும் மது பாவனையில்லாமல் இருப்பவர்கள் குறைவாகவே உள்ளனர். சிலர் குழந்தைகளை முன் வைத்துக் கொண்டும், குடும்பத்திற்கு முன்னாலும், மது வகைகளைக் கையாளுகின்றனர். இன்றும் சிலர் தமது பிள்ளைகளிடம் காசுகொடுத்து புகைக்கும் பொருட்களை வாங்கி வரச்சொல்லி அனுப்பிகின்றார்கள். இன்னும் சிலர் போதை தலைக்கோறி வீதிகளிலும், ஏனைய பொது இடங்களிலும் வீழுந்து கிடக்கின்றார்கள். இவற்றால் பாதிப்படைவது எமது வருங்கால சமூதாயமே. எமது எதிர்கால சந்ததியினரை சிறந்த முறையில் வளர்த்து இந்த நாட்டுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய பாரிய கடப்பாடு பெற்றோருக்கு உண்டு. அதனை சிறந்த முறையில் செய்யவேண்டும்.

சிலர் மாணவர்கள் மத்தியில் மாத்திரைகள் வடிவிலும், ஏனைய பல தந்திரோபாயங்கள் மூலமும் போதை வஸ்த்துக்களைப் பரப்புவதற்கு எத்தணிக்கலாம். இவ்வாறான விடையங்களில் பெற்றோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

கிராமப் புறங்களில் சட்டவிரோத மதுபான விற்பனைகள் இடம்பெறுகின்றன. இவற்றை இல்லாதொழிப்பதற்கு பெற்றோர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். பலர் பொது இடங்களில் புகைப்பிடிக்கின்றனர். இவற்றை பாடசாலை செல்லும் மாணவர்கள் சுவாசிப்பதனால் பல நோய்களுக்கு உட்படுகின்றார்கள். 

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் பல கோடிக்கணக்கான பணம் பதுபாவளைக்காக செலவு செய்யப்படுகின்றது. இந்தப் படித்தை எமது மாணவர்களின் கல்விக்குப் பயன்படுத்தினால் நாம் கல்வியில் எதிர்காலத்தில் பாரிய முன்நேற்றத்தை அடையலாம் என இதன்போது ஊடகவியலாளர் விளக்கமளித்தார்.





SHARE

Author: verified_user

0 Comments: