17 Jan 2019

இத்தாலி பலர்மோவில் சிறப்பாக நடைபெற்ற நாரந்தனை மக்கள் நல் வாழ்வு சங்கத்தின் ஐந்தாவது ஆண்டு விழாவும் மலர் வெளியீடும்.

SHARE

இத்தாலி பலர்மோவில் சிறப்பாக  நடைபெற்ற நாரந்தனை மக்கள் நல் வாழ்வு சங்கத்தின் ஐந்தாவது ஆண்டு விழாவும் மலர் வெளியீடும்.
கடந்த ஞாயிறுக்கிழமை பலர்மோவில் உள்ள கோல்டன் மண்டபத்தில் நாரந்தனை மக்கள் நல் வாழ்வு சங்கத்தின் ஐந்தாவது ஆண்டுவிழா  நாரந்தனை மக்கள் நல் வாழ்வு சங்க தலைவர் திரு. சிவாஸ்கரன் தலைமையில்  மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்தவிழாவில் பலர்மோ வாழ் அனைத்து மக்களும் கலந்து சிறப்பித்ததுடன் பலர்மோவில் வாழும் கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகளும் அரங்கேறி மண்டபத்தில் நிறைந்திருந்த மக்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
குறிப்பாக இராமாயணம் நாட்டிய நாடகம். மற்றும் நாரந்தனை மக்கள் நல் வாழ்வு சங்க மாதர்களினால்  அரங்கேற்றப்பட்ட ஞானசவுந்தரி நாட்டுக்கூத்து.கவிஞர் .ஜெயசீலன் தலைமையில் கவியரங்கம் ஆகியன மண்டபத்தில் நிறைந்திருந்த மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதை காணக்கூடியதாக இருந்தது.
இந்த விழாவில் பிரான்சிலிருந்து  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றிய தலைவரும் பூமணி அம்மா அறக்கட்டளை நிறுவனருமாகிய  சரவணையூர்  விசு செல்வராசா உரையாற்றும் போது புலம் பெயர்ந்து வந்த போதும் தாம் பிறந்த மண்ணையும் மக்களையும் மறக்காது அவர்களின் கல்வி மற்றும் கிராம அபிவிருத்திக்கு மேற்படி சங்கம் சிறப்பாக உதவி வருவதை பாராட்டியதுடன். தாயகத்தில் வாழும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை மனதில் கொண்டு அவர்களுக்கு உதவுவதற்கு மண்டபத்தில் குழுமியிருக்கும் அனைத்து கிராம மக்களும் முன் வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இந்தவிழாவில் பலர்மோ ஆன்மீக பணியகத்தை சேர்ந்த வண.விமல் ராஜன் மற்றும் தமிழ்மாணி வீ. குமரகுருபரன்  பிரான்சு நாரந்தனை மக்கள் நல் வாழ்வு சங்கத்தை சேர்ந்த கு.ஜெயசீலன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர் இவர்களுடன் பலர்மோ பாராளுமன்ற பிரதிநிதிகளுடன் தமிழர் பிரதிநிதியான நாரந்தனையை சேர்ந்த சிவராஜ் ரமணி ஆகியோர் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர் .விழாவில் மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது.






SHARE

Author: verified_user

0 Comments: