17 Jan 2019

போருக்குப்பின்னரான இலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்தியும் புலம்பெயர்வாழ் மக்களின் பங்களிப்பும் தொடர்பான கலந்துரையாடல்.

SHARE
போருக்குப்பின்னரான இலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்தியும் புலம்பெயர்வாழ் மக்களின் பங்களிப்பும் தொடர்பான கலந்துரையாடல்.
ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவின் புலயவெளி பதுளை வீதியில், ஆலய முன்றலில் எதிர்வரும் 19.01.2019 அன்று 9.00 மணிக்கு போருக்குப் பின்னரான இலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்தியும் புலம்பெயர் வாழ் மக்களின் பங்களிப்பும் எனும் தொனிப் பொருளிலான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் வாழ்கின்ற இலங்கை தமிழர் அமைப்பு அறிவித்துள்ளது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மா. உதயகுமார் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இக் கலந்துரையாடலில் சிவில் அமைப்புக்கள், மற்றும் தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்கள், அரச சிறுவனங்களின் பிரதிநிதிகள் பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் லண்டனில் வாழ்கின்ற இலங்கைத் தமிழர் அமைப்பின் தலைவர் ராஜசிங்கம் ஜெயதேவன் அதன் உறுப்பினரான விஸ்வலிங்கம் சிவலிங்கம் ஆகியோர் லண்டனில் இருந்து வருகை தந்து கலந்து கொள்கின்றனர்.
இவ்வமைப்பின் உதவித் திட்டங்கள் தொடர்பாக மக்களின் கருத்துக்கள் அறிந்து கொள்ளப்படுதுடன் மேலும் எவ்வாறான உதவித்திட்டங்களை எதிர்பார்க்கின்றனர் என்பது தொடர்பாகவும் கருத்துக்களை அறிந்து கொள்ளவுள்ளதாகவும் அமைப்பின் தலைவர் ராஜசிங்கம் ஜெயதேவன் தெரிவித்துள்ளார்.

SHARE

Author: verified_user

0 Comments: