29 Jan 2019

முதலைக்குடாவில் இளைஞர், யுவதிகளுக்கு புதிய பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பம்.

SHARE

முதலைக்குடாவில் இளைஞர், யுவதிகளுக்கு புதிய பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பம்.
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான புதிய பயிற்சி வகுப்புக்கள் ஞாயிற்றுக்கிழமை (27) முதலைக்குடாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

கல்விப ;பொதுத்தராதர சாதாரணதரம், கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்று தொழிலுக்காக காத்திருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு ஆங்கிலம், கணினி, சிங்களம், மென்திறன்கள் போன்ற ஆறுமாதகால பயிற்சி வகுப்புக்களே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பயிற்சியின் மூன்றாவது மாதத்தில், தொழில்பாதை வரையப்பட்டு, ஐந்தாவது மாதம் களப்பயணம் மேற்கொள்ளப்பட்டு ஆறாவது மாதம் தொழிலில் இணைக்கப்படவுள்ளதாக மனிதவள பயிற்சி நிலையத்தின் ஸ்தாபகர் அ.கருணாகரன் தெரிவித்தார்.

மனிதவள பயிற்சி நிலையம், ரி.ஆர் அறக்கட்டளை ஆகியன இணைந்து இப்பயிற்சி வகுப்பினை நடாத்துகின்றன.

பிரதேச இளைஞர், யுவதிகளின் வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்தும் பொருட்டு இவ்வாறான பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மனிதவள பயிற்சி நிலையத்தின் ஸ்தாபகரும், நிபுணத்துவ ஆலோசகரும், வளவாளருமான  அ.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், ஆலய மதகுருவினர், அறக்கட்டளையின் பிரதிநிதிகள், உக்டா நிறுவன பிரதிநிதிகள், மனிதவள பயிற்சி நிலைய உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.







SHARE

Author: verified_user

0 Comments: