10 Jan 2019

இன மத பேதமின்றி குடிநீரை ஏற்பாடு செய்து வழங்கியோர் புண்ணியவான்கள் புன்னைக்குடாவில் மீள்குடியேறிய சிங்களக் குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை புன்னைக்குடா புண்ணியா ராமய விஹாராதிபதி தம்பகல்லே வனரத்தின தேரர்

SHARE
இன மத பேதமின்றி குடிநீரை ஏற்பாடு செய்து வழங்கியோர் புண்ணியவான்கள்புன்னைக்குடாவில் மீள்குடியேறிய சிங்களக் குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை புன்னைக்குடா புண்ணியா ராமய விஹாராதிபதி தம்பகல்லே வனரத்தின தேரர்
புன்னைக்குடாவில் மீள்குடியேறிய சிங்களக் குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படாதவேளையிலும் இரக்கம் கொண்டு இன மத பேதமின்றி குடிநீரை பெற ஏற்பாடு செய்து தந்தோர் புண்ணியவான்கள் என ஏறாவூர் - புன்னைக்குடா புண்ணியா ராமய விஹாராதிபதி தம்பகல்லே வனரத்தின தேரர் தெரிவித்தார்.
புன்னைக்குடா கடற்கரையோரம் மீள் குடியேறிய மீனவ சமுதாய சிங்களக் குடும்பங்களின் தற்போதைய நிலைமை பற்றி வியாழக்கிழமை கருத்துத் தெரிவித்த அவர்,

யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு  சுமுக நிலை ஏற்பட்டுள்ளதனால் ஏறாவூர் புன்னைக்குடா கடற்கரையோரத்தை அண்டிய பகுதிகளில் ஏற்கெனவே இங்கு வாழ்ந்து இடம்பெயர்ந்திருந்த கரையோர சமுதாய சிங்கள மீனவக் குடும்பங்களில் 15 குடும்பங்கள் மீளக் குடியேறியுள்ளன.

இவர்களுக்கான வீட்டு வசதி, குடிநீர், மலசலகூடம் உட்பட அடிப்படைச் சுகாதார வசதிகள் எவையும் செய்து தரப்படவில்லை.

இருந்தபோதிலும் இன மத பேதங்களுக்கப்பால், குவைத் நாட்டு அல்-நஜாத் அறக்கொடை அமைப்பினால் இலங்கை அந்-நூர் அறக்கொடை ஸ்தாபனத்தினூடாக பொது இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் வசதிகளை வழங்கும் திட்டத்தின் கீழ் புன்னைக்குடா கடற் கரையில் மீனவர்கள், உல்லாசப் பயணிகள்,  பொதுமக்களுக்கான  குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை மனமுவந்து வரவேற்கிறேன். குடிநீர் ஒரு அருட்கொடையாகும் அதனை இன மத பேதங்களுக்கப்பால் எல்லோருக்கும் கிடைக்கச் செய்தல் ஒரு பெரும் புண்ணிய காரியமாகும்.

அதேவேளை, யுத்தத்தின் காரணமாக புன்னைக்குடாப் பகுதியிலிருந்து  இடம்பெயர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் சுமார் 150 கரையோர சமுதாய சிங்களக் குடும்பங்களில் 15 குடும்பங்கள் ஏற்கெனவே புன்னைக்குடாவுக்கு மீள் குடியமர்வுக்காகத் திரும்பியுள்ளனர்.

இவர்களுக்கு வீட்டு வசதிகளையும் மலசலகூட வசதிகளையும் யாராவது உதவி அமைப்பைச் சேர்ந்தவர்கள் மனமுவந்து செய்து தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றேன்.”  என்றார்.

அந்-நூர் தன்னார்வ உதவு ஊக்க நிறுவனத்தினால் வியாழக்கிழமை புன்னைக்குடா கடற் கரையோரத்தில் சுமார் ஒரு இலட்ச ரூபாய் செலவில்  1500 லீற்றர் கொள்ளவுடன் அமைக்கப்பட்ட குடி நீர்த் தாங்கி பிரதேச மக்களிடம் கையளிக்கப்பட்டதாக அவ்வமைப்பைச் சேர்ந்த சமூக சேவையாளர் எம்.எல்.எம். அப்துல் றஹ்மான் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: