2 Jan 2019

போதையற்ற இளைஞர் சமூகத்தை உருவாக்க இளைஞர் பணியாளர்களாகிய நாங்கள் திடசங்கற்பம் பூணுவோம்.

SHARE
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தின் புத்தாண்டில் சுப நேரத்தில் தேசிய கொடி ஏற்றி கடமையினை ஆரம்பிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (01.01.2019) காலை 09.00 மணியளவில்  உதவிப்பணிப்பாளர் ஹாலித்தீன் ஹமீர் தலைமையில் நடைபெற்றது.
இவ் ஆரம்ப நிகழ்வில் தேசியக்கொடி ஏற்றி தேசிய கீதம் இசைத்து, நாட்டுக்காக உயீர்நீத்த வீரர்களுக்காக இருநிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி, அரசாங்க சேவை சத்தியப் பிரமாணம் செய்து வைத்து உரை ஆற்றிய உதவிப்பணிப்பாளர் புத்தாண்டில் எம்மாலான முழுமையான அர்ப்பணிப்புடன் இளைஞர் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

இந்த நாட்டின் இளைஞர்களின் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்திற்கும் பொறுப்பு வாய்ந்தவர்கள் பாடுபடுபவர்கள் நீங்கள்  அதற்க்காக இளைஞர் சேவை உத்தியோகஸ்தர்களாகிய உங்கள் அனைவருக்கும் சக்தியும் பலமும் கிடைக்கவேண்டும். 

நாட்டில் இளைஞர்களுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்துவது போதைப்பொருள் பாவனை இது பாரிய சவால் மிக்க ஒன்றாக ஒட்டுமொத்த நாட்டையும் பேரழிவுக்கு உட்படுத்திக்கொண்டிருக்கிறது, இந்த பேராபத்திலிருந்து எமது இளைஞர் பரம்பரையினரை மீட்டெடுப்பதோடு இனியொருவர் அதற்கு அடிமையாவதை தடுக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க அனைவரும் கைகோர்த்து பயணிப்போம் எனக் குறிப்பிட்டார். 

நிகழ்வில் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகளான யோ.கலாராணி, நிசாந்தி அருள்மொழி, நிஸ்கோ முகாமையாளர் ப.கிருபைராசா மற்றும் இளைஞர் சேவை உத்தியோகஸ்த்தர்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது  கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.












SHARE

Author: verified_user

0 Comments: