17 Jan 2019

மட்டக்களப்பு மயிலங்கரச்சையில் 60 அடி உயரமான புத்தர் சிலை நிறுவும் அங்குரார்ப்பண நிகழ்வு வெள்ளிக்கிழமை

SHARE
மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள மயிலங்கரச்சை ஸ்ரீ மஹிந்தாராமய விஹாரையில் 60 அடி உயரமான புத்தர் சிலை ஒன்றை நிறுவதற்கான வைபவம் வெள்ளிக்கிழை 18.01.2019 இடம்பெறவுள்ளதாக அவ்விஹாரையின் விஹாராதிபதி கட்டுகஸ்தோட்டே மஹிந்தாலங்கார தேரர் தெரிவித்தார்.
இது மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகப் பெரிய  உயரமான புத்தர் சிலையாக அமையும் வண்ணம் நிர்மாணம் இடம்பெறவுள்ளது.

வெள்ளிக்கிழமை காலை சுபவேளையான நேரம் 9.15 இற்கு இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் விவசாய நீர்ப்பாசன கிராமிய பொருளாதார மற்றும் கால்நடை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, மாவட்ட படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள், பௌத்த பீடங்களின் துறவிகள், பிரதேச பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாக விஹாராதிபதி தெரிவித்தார்.

மயிலங்கரச்சை கிராமத்தில் தமிழ், முஸ்லிம், சிங்கள சமூக மக்கள் வாழ்கின்றார்கள், இது அனைத்து சமூக மக்களும் அமைதியாக வாழும் ஒரு கிராமமாகவும் இன்றளவும் இருந்து வந்துள்ளது. இங்குள்ள ஸ்ரீ மஹிந்தாராமய விஹாரை 1960 களில் நிருமாணிக்கப்பட்டது என மயிலங்கரச்சை கிராம அபிவிருத்திச் சங்கச் செயலாளர் டபிள்யூ. லலித் தெரிவித்தார்.








SHARE

Author: verified_user

0 Comments: