21 Jan 2019

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 4680 குடும்பங்களுக்கு உலருணவு விநியோகம்

SHARE
ஏறாவூர் நகரை அண்டியுள்ள ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் வரும்  மிச்நகர், ஹிஸ்புல்லாஹ் நகர், மீராகேணி, தாமரைக்கேணி, சத்தாம் ஹ{ஸைன், ஸம்ஸம் கிராமம், ஸக்காத் கிராமம், ஐயங்கேணி,  உள்ளிட்ட கிராமங்களில் வாழும் அனைத்துக் குடும்பங்களுக்கும் உலர் உணவு நிவாரண விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் அவர்களினால் அவரது நஸீர் ஹாபிஸ்  பவுண்டேஷன் அறக்கட்டளை மூலம் இந்த உதவு ஊக்க உலருணவு விநியோகம் இடம்பெற்று வருகின்றது.

திங்கட்கிழமை 21.01.2019 ஏறாவூர் காட்டுப்பள்ளி வீதியை அண்டியுள்ள அறபிக் கல்லூரி வளாகத்தில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட்டினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த நிவாரண விநியோகத்தின்போது 4680 குடும்பங்கள் ஒவ்வொன்றும் தலா 1250 ரூபாய் பெறுமதியான அரிசி, சீனி, பால்மா பருப்பு உள்ளிட்ட உலருணவுப் பொதியைப் பெற்றுக் கொண்டனர்.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர், சமீபத்திய வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட கிராமங்களில் வாழும் குடும்பங்களுக்கு  இதுவரை எதுவித நிவாரண உதவிகளையும் வழங்க அரச அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்வரவில்லை. அதனால், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சிரமத்துடன் காலங்கழிக்கும்  நிலைமையை அறிந்து கொண்டதின் பேரில் அவர்களின் நன்மை கருதி தனது சொந்த நிதி அறக்கட்டளை மூலம் நிவாரணம் வழங்க முடிவெடுத்ததாகத் தெரிவித்தார்.  



SHARE

Author: verified_user

0 Comments: