29 Jan 2019

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 32 வது ஆண்டு நினைவு நிகழ்வு

SHARE
கொக்கட்டிச்சோலை படுகொலையின் 32 வது ஆண்டு நினைவு நிகழ்வு 
மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை பெருநிலப்பரப்பின் கொக்கட்டிச்சோலை படுகொலையின் 32 வது ஆண்டு நினைவு உணர்வுபூர்வமான நிகழ்வு திங்கட்கிழமை (28.01.2019) பி.ப 2 மணியளவில் மகிழடித்தீவு சந்தியில் அமைந்துள்ள படுகொலை நினைவு கோபுர வளாகத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் பட்டிப்பளை பிரதேச கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
மண்முனை தென்மேற்கு பிரதேச சபை தவிசாளரும், இலங்கை தமிழரசு கட்சி மண்முனை தென்மேற்கு பிரதேச தலைவருமான சி.புஷ்பலிங்கம் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நினைவு சுடர்கள் ஏற்றி, மலரஞ்சலி வணக்கம் தெரிவித்து அகவணக்கம் செலுத்துதப்பட்டன.

வரவேற்புரை மண்முனை தென்மேற்கு பிரதேச இலங்கை தமிழரசு கட்சி கிளை பொருளாளர் பி.நீதிதேவனும், நன்றியுரையை மண்முனை தென்மேற்கு. பிரதேச இலங்கை தமிழரசு கட்சி செயலாளர் பொ.நேசதுரையும் ஆற்றியதுடன் நினைவு உரைகளும் இதன்போது இடம்பெற்றன. மேலும் இதன்போது  “மறைந்தாலும் மறையாது” என்ற சிறப்பு கவியரங்கம் பட்டிப்பளை பிரதேச கவிஞர்களால் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் கொக்கட்டிச்சோலை படுகொலையில் உயிர்நீத்த உறவுகளின் உறவினர்கள், தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்புனர்கள், கிழக்கு மகாணசபை முன்னாள் உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாநகர முதல்வர், பிரதி முதல்வர் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதி தவிசாளர்கள், உறுப்பினர்கள், மற்றும் பிரேதேச இலங்கை தமிழரசு கட்சி கிளைகளின் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கொக்கட்டிச்சோலை படுகொலை என்பது கடந்த 1987, ஜனவரி மாதம் 28 ஆம் திகதி முதலைக்குடா இறால்வளர்ப்பு பண்ணையில் இலங்கை இராணுவம் மேற்கொண்ட படுமோஷமான இனப்படுகொலை நாளாகும். இந்தப் படுகொலையில் முனைக்காடு, முதலைக்குடா, மகிழடித்தீவு, பண்டாரியாவெளி, படையாண்டவெளி, கடுக்காமுனை, கொக்கட்டிச்சோலை, அரசடித்தீவு, அம்பிளாந்துறை, கற்சேனை, பட்டிப்பளை, தாந்தாமலை ஆகிய கிராம மக்கள் மட்டுமன்றி வவுணதீவு பிரதேசம், வெல்லாவெளி, பிரதேசம் மற்றும் படுவான்கரை பெருநிலப்பரப்பு அடங்கலாக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இராணுவத்தினரால் சுட்டும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.









SHARE

Author: verified_user

0 Comments: