29 Jan 2019

161 வது மாதிரிக் கிராமம் அமைச்சர் சஜித் பிரேமதாஸவினால் மக்களிடம் கையளிப்பு

SHARE
161 வது மாதிரிக் கிராமம் அமைச்சர் சஜித் பிரேமதாஸவினால் மக்களிடம் கையளிப்பு
தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  தும்பங்கேணி இளைஞர் விவசாயத்தி திட்டம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 25 வீடுகளைக் கொண்ட ஆனந்தபுரம் எனும் மாதிரிக் கிராமம் திங்கட் கிழமை (28) மக்களிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வீடமைப்பு நிருமாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இவ்வீடுகளை மக்களிடம் கையளித்தார். இந்த மாதிரிக் கிராமம் செமட்ட செவன திட்டத்தின்கீழ் அமைக்கப்ட்டுள்ள 161 வது மாதிரிக் கிராமமாகும். 


இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுபபினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி சிறிகாந்த, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி, ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பனார் சோ.கணேசமூர்த்தி மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் தசிவாளர்கள், ஏனைய அரசியல் பிpரமுகர்கள், அதிகாரிகள், பொதுமக்கள், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர். 

இதன்போது வாழ்வாதாரக் கடன், மூக்குக்கண்ணாடி, காணி உறுதிப்பதிரம், மற்றுமு; இவ்வீட்டுத்திட்டத்தை நிருமாணிப்பதற்குப் பணியாற்றிய அரச அதிகாரிகளுக்கு சான்றிதழ்கழும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


























SHARE

Author: verified_user

0 Comments: