24 Dec 2018

அரவம் தீண்டியதால் இறந்த அடிகளாரின் பிரேத ஊர்வலத்தில் இன ஐக்கியம்

SHARE
மட்டக்களப்பு கூழாவடி புதுமைபுரம் பங்கை பிறப்பிடமாக கொண்ட அடிகளார் செற்றிக் ஜுட் ஒக்கஸ் புடையன் விரியன் தீண்டி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மரணமடைந்தார். அவரது நல்லடக்கம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இந்த இறுதி ஊர்வலத்திலும் நல்லடக்க நிகழ்விலும் அனைத்து மத பெரியார்களும் அனைத்து சமூக மக்களும் கலந்து கொண்டமை இன ஐக்கியத்திற்கான எடுத்துக்காட்டாக இருந்ததாக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் கல்முனை பங்கில் உதவி பங்கு தந்தையாக பணியாற்றிய அடிகளார் கடந்த சில காலமாக மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் எவன் எஸ்டேட் பகுதிக்கு பொறுப்பாளராக நிர்வகித்து வந்தார்

அடிகளார் கடந்த சனிக்கிழமை காலை எவன் எஸ்டேட் பகுதி உள்ள மின் கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்கினை அணைப்பதற்காக சென்ற வேளையில் புடையன் விரியன் பாம்பு கடிக்கு உள்ளானார்.

உடனடியாக அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவரச சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பலனின்றி உயிரிழந்துள்ளார்

இறுதி நல்லடக்கம் மறைமாவட்ட ஆயர் ஜோசெப் பொன்னையா தலைமையில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மட்டக்களப்பு ஆலையடிச்சோலை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது

அருட்தந்தையின் இறுதி நல்லடக்க நிகழ்வில் முன்னாள் ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை, மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், பிரதி முதல்வர் கந்தசாமி சத்தியசீலன், கோட்டமுனை பள்ளிவாயல் பிரதம இமாம் மௌலவி ஏ.ஜே.எம் .இல்யாஸ், மற்றும் அடிகளார், சகோதரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், இராணுவ அதிகாரிகள் கலந்து உட்பட அனைத்து சமூக பொதுமக்களும் கொண்டனர்

இதேவேளை மட்டக்களப்பு கல்லடி 231 இராணுவ கட்டளை பிரிவின் மட்டக்களப்பு கஜபா பிரிவு இராணுவ அதிகாரிகளினால் தாகசாந்தி நிலையம் அமைக்கப்பட்டு இறுதி நல்லடக்க நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு குளிர்பானம் வழங்கப்பட்டது

மட்டக்களப்பில் சமீப கால நிகழ்வுகளில் முஸ்லிம் மதத்தலைவர் ஒருவர் கத்தோலிக்க மதத்தலைவர் ஒருவரின் புதவுடலைச் சுமந்த நிகழ்வு மரணச் சடங்கில் கலந்து கொண்டவர்களது மனங்களை நெகிழ வைத்தது.

மதங்களைக் கடந்த மனிதாபிமானமாக இந்நிகழ்வு பார்க்கப்படுகிறது.





SHARE

Author: verified_user

0 Comments: