ஆலையடிவேம்பு பிரதேச வர்த்தக சமூக நலன்புரிச்சங்கத்தின்  
புதிய நிருவாக சபை தெரிவு 
ஆலையடிவேம்பு பிரதேச வர்த்தக சமூக நலன்புரிச்சங்கத்தின் பொதுக்கூட்டமானது கடந்த 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை  மாலை 3.00 மணியளவில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில்  ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் திரு. கே. லவநாதன் மேற்பார்வையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில்  உதவி பிரதேச செயலாளர் ரி. கஜேந்திரன், அபிவிருத்தி
உத்தியோகத்தர் ரி. புவிதர்சன் ஆகியோர்  கலந்து சிறப்பித்தனர்.
புதிய நிருவாக சபையின் தலைவராக திரு. ஆர். ஜெகநாதனும் செயலாளராக  கே. கிருசாந்தனும் பொருளாளராக ஏ. ராஜகாந்தனும் உபதலைவராக எஸ். தர்மராஜாவும் உபசெயலாளராக பீ. இராசேஸ்வரனும் தெரிவு செய்யப்பட்ட அதேவேளை, புதிய நிருவாக சபை உறுப்பினர்களாக ரீ. பிரகாஸ்பதி,கே.கிருஸ்னமூர்த்தி, கே. காந்தரூபன்,கே. ரமேஸ்,மு. குழந்தைவடிவேல்,ரீ. யோகேஸ்வரன்,பீ. செந்தூரன்,எஸ். நிரஞ்சலராஜ்,
கே. கேசகமூர்த்தி ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

0 Comments:
Post a Comment