9 Dec 2018

பெரியகல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தின் சுற்றுமதில் அமைப்பதற்குநிதி அன்பளிப்பு

SHARE
பெரியகல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தின் சுற்றுமதில் அமைப்பதற்குநிதி அன்பளிப்பு
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியகல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயம் கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தின் போது முழுமையாக சேதமடைந்திருந்தன. 
இப்பாடசாலையினை முழுமையாக கட்டிமுடிக்கும் பொறுப்பினை ரொற்றிக் கழகம் பொறுப்பேற்று அழகுற கட்டிமுடிந்திருந்தன.

இப்பாடசாலையின் சுற்றுமதிலுக்கான அடி அத்திவாரம் கருங்கல்லினால் இடப்பட்டு மேற்பகுதி இருப்புக் கேடர் மூலமாக பொருத்தப்பட்டு சுமார் பதினான்கு வருடங்கள் கடந்துள்ள நிலையில் கேடர் துருப்பிடித்து இறந்து போயுள்ள நிலையில் அதனை அகற்றி ஐந்தாண்டு திட்டத்தின் அடிப்படையில் வசதிபடைத்தவர்களின் உதவியுடன் கட்டங் கட்டமாக சுற்றுமதிலுக்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் பாடசாலைச் சமுகத்தினரின் கோரிக்கைக்கு அமைவாக பெரியகல்லாற்றினை பிறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டினை வதிவிடமாகக் கொண்டவருமான  சமுகப்பற்றாளரும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்குதன்மை முழுமையாக அற்ப்பணித்தவருமான ச.கோபிநாந் தனது பெற்றோர்களாகிய சந்திரசேகரன் மனோன்மணி தம்பதிகளின் ஞாபகார்த்தமாக பாடசாலைவாயிலின் முன் பகுதிக்கானமதிலினை அமைத்து அதனை வர்ணங்களினால் அழகு படுத்துவதற்காக பெருந் தொகையான நிதியினை அன்பளிப்பாகவழங்கியுள்ளார். 

நிதியுதவி
வழங்கியுள்ள பெரியகல்லாற்றினை பிறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டினை வதிவிடமாகக் கொண்ட ச.கோபிநாத் என்பவருக்கு பாடசாலைச் சமுகம் நன்றியினையும் பாராட்டினையும் தெரிவிக்கின்றனர்.



SHARE

Author: verified_user

0 Comments: