5 Dec 2018

மட்டக்களப்பின் முதலாந்தர மூத்த கல்வி அதிகாரிகள் மூவர் ஏக காலத்தில் ஓய்வு.

SHARE
மட்டக்களப்பின் முதலாந்தர மூத்த கல்வி அதிகாரிகள் மூவர் ஏக காலத்தில் ஓய்வு பெற்றுச் செல்வது வெற்றிடத்தை ஏற்படுத்தியிருப்பதாக அதிபர்கள், ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கை கல்வி நிருவாக சேவையின் முதலாந்தர அதிகாரிகளான கிழக்கு மாகாண மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் சின்னத்தம்பி மனோகரன், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கணபதிப்பிள்ளை பாஸ்கரன் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் இரத்னம் சுகிர்தராஜன் ஆகியோரே டிசெம்பெர் மாதத்தின் முற்பகுதியில் ஓய்வு பெற்றுள்ளனர்.

செட்டிபாளையத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி மனோகரன் தனது 60வது வயதில் கடந்த திங்கட்கிழமை 03.12.2018 ஓய்வு பெற்றுள்ளார். இவர் 15 வருடங்கள் ஆசிரிய சேவையிலும் 19 வருடங்கள் கல்வி நிருவாக சேவையிலும்  பணியாற்றியதோடு கடைசியாக ஓய்வு பெறும் தருணத்தில் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளராக கடந்த 8 வருடங்கள் கடமையாற்றியவராகும்.

மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கணபதிப்பிள்ளை பாஸ்கரன் டிசெம்பெர்  5ஆம் திகதி தனது 60வது வயதில் ஓய்வு பெற்றுள்ளார்.

களுதாவளையைச் சேர்ந்த இவர் 21 வருடங்கள் ஆசிரிய சேவையிலும் 18 வருடங்கள் கல்வி நிருவாக சேவையிலும்  பணியாற்றியுள்ளார்.

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் இரத்னம் சுகிர்தராஜன் 15 வருடங்கள் ஆசிரிய சேவையிலும்  19 வருடங்கள் கல்வி நிருவாக சேவையிலும் பணியாற்றிய நிலையில் டிசெம்பெர் 9ஆம் திகதி தனது 60வது வயதில் ஓய்வு பெறுகிறார்.



SHARE

Author: verified_user

0 Comments: