18 Dec 2018

வாகரையில் கூட்டுறவுச் சங்கத்தினால் பொதுமக்களின் நலன்புரி வசதிக்காக அந்திம கால சேவை நிலையம் திறந்து வைப்பு

SHARE
வாகரையில் கூட்டுறவுச் சங்கத்தினால் பொதுமக்களின் நலன்புரி வசதிக்காக அந்திம கால சேவை நிலையம் திறந்து வைப்பு
வாகரைப் பிரதேச மக்களின் நீண்டகாலத் தேவையாக இருந்த அந்திம கால சேவை நிலையம் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக வாகரை பிரதேச முதியோர் சம்மேளன பொதுச் செயலாளர் ரீ.ஜீ. குருகுலசிங்கம் தெரிவித்தார்.

கோறளை வடக்கு வாகரை பலநோக்குக் கூட்;டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை 18.12.2018 வாகரையில் அந்திம கால சேவை நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இங்கு பிரேதப் பெட்டிகள் மிகக் குறைந்த விலையில் கிடைக்க ஏற்ற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு கூட்டுறவு உதவி ஆணையாளர் வி. தங்கவேல், வாகரைப் பிரதேச செயலாளர் எஸ். ஹரன், பிரதேச சபைத் தவிசாளர் எஸ். கோணலிங்கம், வாகரைப் பொலிஸ் அலுவலர், கூட்டுறவுப் பரிசோதகர்கள், கூட்டுறவு இயக்குனர் சபை உறுப்பினர்கள், பொதுச் சபை உறுப்பினர்கள், பிரதேச பொது மக்கள்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய கூட்டுறவு உதவி ஆணையாளர் தங்கவேல்,“இதுவரை காலமும் வாகரைப் பிரதேச பொதுமக்கள் தமது அந்திம கால சேவைகளை நாடுவதற்கு சுமார் 90 கிலோமீற்றர் தொலைவிலுள்ள மட்டக்களப்பு நகருக்கோ அல்லது மூதூர் நகருக்கோ செல்ல வேண்டியிருந்தது.

இதனால் பொருளாதார ரீதியாகவும் மற்றும் சிரமங்களாலும் சொல்லொண்ணாத் துன்பங்களை அனுபவித்து வந்தனர்.

இந்தக் கஷ‪;டங்கள் தற்போது எமது கூட்டுறவு சேவையினால் நிவர்த்திக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து அலைச்சல் இன்றியம் பொருளாதாரக் கஷ்டமின்றியும் காலடியில் அந்திம கால சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.” என்றார்.

இதேவேளை, வாகரைப் பிரதேசத்தில் நிகழும் மரணங்களின்போது பிரேதப் பெட்டிகளை எடுத்துச் சென்று கொடுக்கும் இலவச வாகன வசதிகளைப் பெற்றுத் தருவதாக கோறளை வடக்கு பிரதேச சபைத் தலைவர் எஸ். கோணலிங்கம், பொதுமக்களிடம் உறுதியளித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: