25 Nov 2018

யார் எந்த ருத்ராட்சம் அணியலாம்?

SHARE

நெற்றியில் பட்டையும் கழுத்தில் ருத்திராட்சமும் அணிவது சிவனடியார்களின் அடையாளம். கழுத்தில் உருத்திராட்சம்  இருந்தால் நம் மனம் அமைதியடைகிறது. பல முகங்களில் உருத்திராட்சம் கிடைக்கிறது என்றாலும் ஒவ்வொருவரின் நட்சத்திரத்திற்கு உகந்த முகங்கள் உடைய உருத்திராட்சம்  அணிவது சிறப்பு. 
முதல்முறையாக  ருத்ராட்சம் அணிவதற்கு உகந்த நாள்  பார்த்து அந்த நாளில்  பூசம் நட்சத்திரம் அமைந்துள்ளதா என்பதையும் கவனித்து ருத்திராட்சத்தை பாலில்  நனைத்து திருக்கோயில் ஒன்றில்  வைத்து அணிவது அதிக பலன்களைக் கொடுக்கும். 
12 ராசிக்காரர்களுக்கும் அவரவருக்கு உரிய நட்சத்திரங்களின் அடிப்படையில் அணிய வேண்டிய ருத்திராட்ச பட்டியல் இதோ
அஸ்வினி – அஸ்வினி நட்சத்திரம் உள்ளவர்கள் கேது நவ முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.
பரணி – பரணி நட்சத்திரம் உள்ளவர்கள் சுக்ரன் ஷண் முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.
கார்த்திகை – கார்த்திகை நட்சத்திரம் உள்ளவர்கள் சூர்யன் ஏக முகம் அல்லது த்வாதசமுகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.
ரோஹிணி – ரோஹிணி நட்சத்திரம் உள்ளவர்கள் சந்திரன் த்வி முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.
மிருகசீரிஷம் – மிருகசீரிஷம் நட்சத்திரம் உள்ளவர்கள் செவ்வாய் த்ரி முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.
திருவாதிரை – திருவாதிரை நட்சத்திரம் உள்ளவர்கள் ராகு அஷ்ட முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.
புனர் பூசம் – புனர் பூசம் நட்சத்திரம் உள்ளவர்கள் ப்ருஹஸ்பதி பஞ்ச முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.
பூசம் – பூசம் நட்சத்திரம் உள்ளவர்கள் சனி சப்த முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.
ஆயில்யம் – ஆயில்யம் நட்சத்திரம் உள்ளவர்கள் புதன் சதுர் முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.
மகம் – மகம் நட்சத்திரம் உள்ளவர்கள் கேது நவ முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.
பூரம் – பூரம் நட்சத்திரம் உள்ளவர்கள் சுக்ரன் ஷண் முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.
உத்தரம் – உத்தரம் நட்சத்திரம் உள்ளவர்கள் சூர்யன் ஏக முகம் அல்லது த்வாதச முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.
ஹஸ்தம் – ஹஸ்தம் நட்சத்திரம் உள்ளவர்கள் சந்திரன் த்வி முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.
சித்திரை – சித்திரை நட்சத்திரம் உள்ளவர்கள் செவ்வாய் த்ரி முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.
ஸ்வாதி – ஸ்வாதி நட்சத்திரம் உள்ளவர்கள் ராகு அஷ்ட முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.
விசாகம் – விசாகம் நட்சத்திரம் உள்ளவர்கள் ப்ருஹஸ்பதி பஞ்சமுகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.
அனுஷம் – அனுஷம் நட்சத்திரம் உள்ளவர்கள் சனி சப்த முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.
கேட்டை – கேட்டை நட்சத்திரம் உள்ளவர்கள் புதன் சதுர் முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.
மூலம் – மூலம் நட்சத்திரம் உள்ளவர்கள் கேது நவ முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.
பூராடம் – பூராடம் நட்சத்திரம் உள்ளவர்கள் சுக்ரன் ஷண் முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.
உத்திராடம் – உத்திராடம் நட்சத்திரம் உள்ளவர்கள் சூர்யன் ஏக முகம் அல்லது த்வாதச முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.
திருவோணம் – திருவோணம் நட்சத்திரம் உள்ளவர்கள் சந்திரன் த்வி முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.
அவிட்டம் – அவிட்டம் நட்சத்திரம் உள்ளவர்கள் செவ்வாய் த்ரி முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.
சதயம் – சதயம் நட்சத்திரம் உள்ளவர்கள் ராகு அஷ்ட முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.
பூரட்டாதி – பூரட்டாதி நட்சத்திரம் உள்ளவர்கள் சனி பஞ்ச முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.
உத்திரட்டாதி – உத்திரட்டாதி நட்சத்திரம் உள்ளவர்கள் சனி சப்த முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.
ரேவதி – ரேவதி நட்சத்திரம் உள்ளவர்கள் புதன் சதுர்முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.
ஓம் நமச்சிவாய ..... (tx: newstm)

SHARE

Author: verified_user

0 Comments: