8 Nov 2018

தொடராகப் பெய்துவரும் அடைமழை சார்ந்த சீரற்ற காலநிலையால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

SHARE
தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எச்சரிக்கப்பட்டிருந்த நிலையில் கிழக்கு மாகாணத்தில் கடந்த சில தினங்களாக பரவலாகப் பெய்து வரும் அடைமழையினால் மீனவர்களின் வாழ்வாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக கரையோர சமுதாய மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே தாழமுக்கம் வெள்ளிக்கிழமையளவில் 09.11.2018 தென்கிழக்கு வங்காளவிரிகுடா கடல் பிராந்தியத்தில் அந்தமான் தீவிற்கு அண்மையில் தாழமுக்கம் ஒன்று உருவாகும் சாத்தியமுள்ளதாக வானிலை அவதான நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட நிலையப் பொறுப்பத்திகாரி கே. சூரியகுமாரன் தெரிவித்தார்.

எனவே, புதிய காலநிலை எச்சரிக்கையும் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார அன்றாடத் தொழிலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, மீனவர்கள் கடலுக்குச் செல்லாததன் காரணமாக கடல் மீன்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதோடு கருவாட்டுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது.
அதேவேளை, கடலுணவுப் பிரியர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அறிய முடிகின்றது.



SHARE

Author: verified_user

0 Comments: