26 Nov 2018

பிரபாகரன் வழங்கிய முக்கிய ஆவணங்களுடன் மகனின் புகைப்படத்தைக் காண ஓடிவந்த வயது வீரத்தாய் தாய்.

SHARE
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்தபோது தனது மகன் வீரச்சாவடைந்து விட்டார் என்ற உறுதிப்பத்திரம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கதின் தலைவர் வே.பிரபாகரனால் மட்டக்களப்பைச் சேர்ந்த தாய் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. தனது மகன் வீரச்சாவடைந்த நிலையில் மகனின் புகைப்படம் ஒன்று கூட இல்லாமல் தாம் தவித்து வருவதாகத் குறித்த தாய் தெரிவிக்கின்றார். 
இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வீரச்சாவடைந்த மாவீரர்களின் உருவப் படங்களை அவர்களது பெற்றோருக்கு வழங்கி கௌரவிக்கும் நிகழ்வொன்று சனிக்கிழமை (24) ஜனநாயகப் போராளிகள் கட்சியினால் மட்டக்களப்பு வெல்லாவெளியில் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவும், தனது மகனின் புகைப்படம் கிடைக்கும் என்ற சந்தோசத்திலும், ஓடோடி வந்து அங்கு வைக்கப்பட்டிருந்த 100 மாவீரர்களின் புகைப்படங்கள் ஒவ்வொன்றையும், உற்றுப் பார்த்து வந்தவேளையிலும் தனது மகனின் புகைப்படம் இல்லாமலிருந்தது குறித்த தாய்க்கு மிகவும் மேலும் வேதனையை ஏற்படுத்தியது.

இச்சந்தர்ப்பத்தில் தனது மகன் வீரச்சாவடைந்து விட்டார் என்பதை உறுத்திப்படுத்தும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனால் குறித்த தாய்க்கு வழங்கப்பட்டிருந்த ஆவணங்கள் ஒவ்வொன்றாக எடுத்துக் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி, மற்றும், அக்கட்சியின் மட்டு அம்பாறை மாவட்ட பொறுப்பாளர் நா.நகுலேஸ், ஆகியோரிடம், கண்ணீர் மல்க காண்பித்தார். 

அதில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் அக்குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வந்த உதவி வழங்கு அட்டை, அவ்வியக்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த சமூக பொருளாதார அபிவிருத்தி வங்கிப் புத்தகம் போன்றறைக் பல ஆவணங்கள் இருந்தன.

குறித்த தாயின் கண்ணீரை துடைத்து விட்டு கட்டியணைத்துக் கொண்ட ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி நாங்கள் முதற் கட்டமாக 100 மாவீரர்களின் புகைப்படங்களை மிகவும் கஸ்ற்றப்பட்டு தேடி எடுத்து அதனை உரியமுறையில் பிறேம் போட்டு இன்று வழங்குகின்றோம், மிகவிரைவில் உங்களது மகனின் புகைப்படத்தை தேடி எடுத்து அதனை உங்கள் காலடிக்கே கொண்டு தருவோம் எனக் கூறியும், ஆறுதல் வார்த்தைகள் தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.








SHARE

Author: verified_user

0 Comments: