8 Nov 2018

10 இலட்சம் பலாமரக்கன்றுகளை நாட்டி வளர்க்கும் திட்டம் வாகரையிலும் அமுல். “நாமே பயிரிட்டு நாமே உண்போம்”

SHARE
“நாமே பயிரிட்டு நாமே உண்போம்” எனும் செயற்திட்டத்தின் கீழ் 10 இலட்சம் பலாமரக்கன்றுகளை நாட்டி வளர்க்கும் திட்டம் வாகரையிலும் தொடக்கி வைக்கப்பட்டுள்ளதாக பிரதேச கமநல சேவை நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாகரை கமநல சேவைகள் நிலையத்தில் வியாழக்கிழமை 08.11.2018 இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்டுமுறிவு விவசாய அமைப்பின் செயலாளர் ரீ.ஜீ. குருகுலசிங்கம் சம்பிரதாயபூர்வமாக பலாமரக் கன்று ஒன்றை நாட்டி வைத்து பிரதேசமெங்கும் பலாமரக் கன்றுகள் நடும் செயற்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் வாகரை கமநல சேவைகள் நிலைய பிரிவின் விவசாய ஆராய்ச்சி உதவி உற்பத்தியாளர் கே. பதிராங்கன், அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எஸ். பிரசாந்த், ஏ.  துரைராஜ், எம். யுனேஸ்காந்த், என். உதயதேவி, பி. ஜனகராஜ் ஆகியோருட்பட பிரதேசத்தின் தமிழ் முஸ்லிம் விவசாயிகளும் கலந்து கொண்டனர். ‪



SHARE

Author: verified_user

0 Comments: