11 Oct 2018

மோட்டார் குண்டு கண்டெடுப்பு

SHARE
வெலிக்கந்தைப் பொலிஸ் பிரிவிலுள்ள மஹாவலித்தென்ன எனும் கிராமத்தில் 81 மில்லிமீற்றர் மோட்டாருக்குப் பயன்படுத்தும் வெடிகுண்டொன்று செவ்வாய்க்கிழமை மாலை 09.10.2018 கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குழாய் நீர் விநியோகத்திற்காக நிலத்தடியில் குழாய்களைப் பொருத்தும் வேலையில் ஈடுபட்டிருந்தபோது மோட்டார் குண்டொன்று வெளிக்கிளம்பியதாக குழாய் பொருத்துநர்கள் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தகவலைத் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் பிரகாரம் ஸ்தலத்திற்கு விரைந்த வெலிக்கந்தை பொலிஸார் நீர் விநியோகக் குழாய் பொருத்துவதற்காகத் தோண்டப்பட்ட குழிக்குள் குண்டு இருப்பதையறிந்து குண்டு செயலிழக்கச் செய்யும் படை நிபுணர்களை வரவழைத்து அவர்கள் மூலமாக குண்டை மீட்டுள்ளனர்.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கிராமங்களைப் பாதுகாப்பதற்காக இப்பகுதியில் படை முகாம் அமைக்கப்பட்டிருந்தது.

அதேவேளை அவ்வப்போது படையினருக்கும் எல்ரீரீஈ இனருக்கும் இடையில் மோதல்களும் இடம்பெற்று வந்துள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பயன்படுத்தப்படுவதற்காக மறைத்து வைக்கப்பட்ட குண்டாக இருக்கலாம் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: