13 Oct 2018

மட்டக்களப்பு நகரில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றைச் சேர்ந்த மாணவர்கள் இனிப்புப் பண்டம் சாப்பிட்டல் திடீர் சுகவீனம்

SHARE

மட்டக்களப்பு நகரில் உள்ள பிரபல கல்லூரி  ஒன்றைச்  சேர்ந்த  தரம் 7 இல் கல்வி பயிலும் மாணவர்கள் இனிப்புப் பண்டம் சாப்பிட்ட 8 பேர்  திடீர் சுகவீனமுற்ற நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின்  27 ஆம் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் வெள்ளிக்கிழமை (12)கல்லூரியில் இடம்பெற்றுள்ளது.
மாணவர் ஒருவர்  தனது பிறந்த நாளுக்காக சக மாணவர்களுக்கு கடையில் வாங்கிய  இனிப்புப் பண்டம் வழங்கிய போது  அதனை சாப்பிட்ட  மாணவர்கள் வாந்தி எடுத்துள்ளதாகவும் ,அதனை  தொடர்ந்து மாணவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இம்மாணவன் மட்டக்களப்பு நகரில் உள்ள கடையொன்றில் பணத்தை கொடுத்து இனிப்புப் பண்டம் கொள்வனவு செய்துள்ளான்.கொள்வனவு  செய்துள்ள இனிப்புப் பண்டம் தனது வகுப்பில் உள்ள 42 மாணவர்களுக்கு  மகிழ்ச்சியுடன் வழங்கியுள்ளான். இனிப்புப் பண்டம் சாப்பிட்ட  42மாணவர்களில் 8 மாணவர்களே வாந்தி எடுத்தநிலையிலும், மயமுற்றநிலையிலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இனிப்புப் பண்டம் காலாவதி திகதியை பூர்த்தி செய்யவில்லை  என்றும், 2019 ஆம் ஆண்டுவரையும் காலாவதி திகதி பொதி செய்யப்பட்டுள்ளதுடன், இனிப்புப் பண்ட பொதியில் இருந்தே மாணவர்கள் சாப்பிட்டுள்ளார்கள்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள  மாணவர்களின் நிலைமை தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு வைத்தியசாலை அதிகாரிகள் அனுமதி வழங்கிய  போதிலும் ,மாணவர்களாலும் ,ஆசிரியராலும் அனுமதி வழங்கப்படவில்லை .
சுகவீனமுற்ற மாணவர்கள் தொடர்பான விசாரணைகளை
SHARE

Author: verified_user

0 Comments: