27 Oct 2018

மட்.பட்.மண்டூர்- 13விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் சித்திரப் போட்டியில் மீண்டும் சாதனை.

SHARE

கல்வி அமைச்சு ரளயனை usaid மற்றும்  pffreal ஆகிய  அமைப்புக்கள்  இனைந்து “நாமே சமுதாயம் நாமே சனநாயகம்” எனும் தலைப்பில் அகில இலங்கை ரீதியில் நடாத்திய ஓவியப் போட்டியில் தேசிய மட்டத்தில் பங்குபற்றி  செ.டிலக்சனா அதி சிறப்பு சித்திக்கான சான்றிதழையும், பதக்கத்தினையும் பெற்றுள்ளதோடு,  க ரூபிகா. தேசியமட்டத்தில் பங்குபற்றியமைக்கான சாண்;றிதழையும் நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவிடமிருந்து செவ்வாய்க்கிழமை (23) நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் வைத்துப்பெற்றுக் கொண்டனர்.
இவர்களையும் பயிற்றுவித்த ஆசிரியர் பு.சிறிக்காந் அவர்களையும், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் கல்விசாரா ஊழியர்கள் அனைவரையும், கல்விச் சமூகம் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
மட்.பட்.மண்டூர்- 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள்  அப்பாடசாலையின் சித்திரப் பாட ஆசிரியர் பு.சிறிகாந் அவர்களின் கற்பித்தலின் பயனாக பிரதேச மட்டம், வலயமட்டம், மாகாண மட்டம், மற்றும் தேசிய மட்டங்களில் பங்குபற்றி பல முறை சித்திரப்போட்டிகளில் முதலிடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


SHARE

Author: verified_user

0 Comments: