2 Oct 2016

முழு கிழக்கு மாகாணமும் கைத்தொழில் உற்பத்தி ஏற்றுமதி வலயமாக மாற்றப்படும் கிழக்கு முதல்வர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் மட்டக்களப்பில் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் தெரிவிப்பு

SHARE
தூர்ந்துபோய்க் கிடக்கும் வாழைச்சேனை காகித ஆலை கைத்தொழில் உற்பத்தி வலயமாக மாற்றப்படும் என கிழக்கு முதல்வர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் மட்டக்களப்பில் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போது தெரிவித்தார்.
செப்டெம்பெர் 30ஆம் திகதி தொடக்கம் ஒக்ரோபெர் 02 ஆம் திகதி வரை சர்வதேச வர்த்தகக் கண்காட்சி மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

இந்த வர்த்தகக் கண்காட்சியை மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் சம்மேளனம் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் (ருNனுP) மற்றும் லங்கா எக்ஸிபிசன் அன்ட் கொன்பிரன்ஸ் சேர்விசஸ் நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

நிகழ்வை வெள்ளிக்கிழமை மாலை (செப்ரெம்பெர் 30, 2016) ஆரம்பித்து வைத்து அங்கு தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர்@ கிழக்கு மாகாணத்தில் ஒரு சர்வதேச விமான நிலையம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை நான் அரசாங்கத்திடம் முன் வைத்துள்ளேன்.

இந்த விமான நிலையம் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைக்கும் புணானைக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைய வேண்டும் என்ற சாத்தியவள அறிக்கையையும் நாங்கள் ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி ஆகியோரிடம் சமர்ப்பித்துள்ளோம்.

கிழக்கு மாகாணத்தை சுற்றுலாத்துறை மூலம் அபிவிருத்தி செய்வதற்கு இந்த சர்வதேச விமானப் போக்குவரத்து வசதி இன்றியமையாததாகும்.
பாரிய, நடுத்தர மற்றும் சிறிய கைத்தொழில் புரட்சிவலயமாக கிழக்கை மாற்றுவதற்குரிய திட்டங்களைப் பற்றி நாங்கள் அரசுடன் கலந்துரையாடி வருகின்றோம்.

அத்தகைய ஒரு கைத்தொழில் புரட்சி ஏற்படும்பொழுது கிழக்கு மாகாணம் ஒரு உற்பத்தி ஏற்றுமதி வலயமாக மாறும்.

கிழக்கு மாகாணத்திலே 105 கைத்தறி விற்பனை நிலையங்கள் உள்ளன. ஆனால், அவை செயலற்றுக் கிடக்கின்றன.

சிறந்த உற்பத்தி சிறந்த முடிவுறுத்தல். என்பன எமது உற்பத்திகளின் மவுசை அதிகரிக்கச் செய்ய முடியும்.

கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் ஜனாதிபதியும் பிரதம மந்திரியும் அக்கறையோடு இருப்பதை அறிய முடிகின்றது.

இது ஒரு நல்ல சகுனம். அதனை நாங்கள் முழுமையாகப் பயன்படுத்தி இந்த மாகாணத்தை வளங்கொழிக்கும் பிரதேச மாற்ற அனைவரும் இன மத கட்சி பேதங்கள் மறந்து ஒன்றிணைய வேண்டும்” என்றார். 

SHARE

Author: verified_user

0 Comments: