மட்டக்களப்பு - காத்தான்குடி ஆரையம்பதி எல்லை பிரதான வீதியில் செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணியளவில்
(ஒகஸ்ட் 16, 2016) பஜிரோ வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து நிகழ்ந்துள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரே திசையில் சென்ற இவ்விரண்டு வாகனங்களும் மோதிக் கொண்டதில் உயிரிழப்போ பாரதூரமான காயங்களோ ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
வீதியில் முன்னால் பயணித்துக் கொண்டிருந்த பஜிரோ வாகனத்திற்குள் பின்பக்கமாகச் சென்ற மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பஜிரோவுக்குள் புகுந்துள்ளது.
மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற காத்தான்குடி பாலமுனையைச் சேர்ந்த முஹம்மத் றஸாத் (வயது 24) என்பவர் திடீரெனப் பாய்ந்து உயிராபத்திலிருந்து தப்பியுள்ளார் அவருக்கு சிறுகாயங்கள் ஏற்பட்டுள்ளன.
விபத்து நடந்த இடத்துக்கு விரைந்த காத்தான்குடிப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment