(டிலா )
கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிஞர்கள் திருநாள் விருதுபெற்ற மருதமுனையை சேர்ந்த பிரதேச செயலாளர் எம்.எம்.நெளபல் எழுதிய 'பேரண்டக் கனவு' கவிதை நூல் அறிமுக நிகழ்வு அண்மையில் மருதமுனை பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது.
எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபாவின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்டில் பிரதி மீதான வாசிப்பை கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஏ.எம்.றியாஸ் அகமட் நிகழ்த்த, நூலாசிரியர் மீதான பார்வையை 'ஆகவே' சிற்றிதழ் ஆசிரியர் எம்.ஐ.எம்.ஜபார் நிகழ்த்தினார்.
வருகை தந்தவிருந்தினர்களில் சிலர் பாடல் பாடி அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். நூலாசிரியர் எம்.எம்.நெளபல் இறுதியில் ஏற்புரையை நிகழ்தினார்.
0 Comments:
Post a Comment