சமூகசேவை திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட வவுனதீவு“ வாழ்வகம் விசேட தேவையுடையோருக்கான
அமைப்பினால்” நடாத்தப்படும் பாலர் பாடசாலைக்கு கடந்த திங்கட் கிழமை கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் நேரில் சென்று பார்வையிட்டு அப்பாடசாலையின் குறைநிறைகள் பற்றி கேட்டறிந்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தங்கவேல், சமுகசேவைகள் திணைக்களத்தின் மாவட்ட உத்தியோகஸ்தர் அருள்மொழி, இலங்கைத் தமிழரசுக் கட்சிமட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் தலைவர் கி.சேயோன் ஆகியோர்கலந்து அமைச்சருடன் கலந்து கொண்டனர்.
இதன் போதுபாலர் பாடசாலை தொடர்பிலான பல்வேறு விடயங்களைக் கேட்டறிந்த அமைச்சர் அவர்கள் தனது தனிப்பட்டநிதியில் இருந்து பாலர் பாடசாலையின் அபிவிருத்திக்காக ரூபா 100,000 நிதியுதவி அளித்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment