மட்டக்களப்பு – பொலொன்னறுவை மாவட்டங்களின் எல்லையிலுள்ள வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவின் கீழ்வரும் ரெதிதென்ன
பகுதியில் வியாழக்கிழமை மாலை (ஓகஸ்ட் 11, 2016) ஆறு மணியளவில் கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் எல்ப் ரக பார ஊர்தியும் மோட்டார் சைக்கிளும் மோதியதால் ஏற்பட்ட இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயங்களுக்குள்ளாகி உடனடியாக வெலிக்கந்தை வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment