25 Aug 2016

வேலைவாய்ப்பற்றிருக்கும் மட்டு.இளைஞர் யுவதிகளுக்குச் சந்தர்ப்பம்

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் தனியார் துறையில் காணப்படும் தொழில் தேவையினை கருத்தில் கொண்டு தொழில் வழங்குனர்களின் எதிர்பார்ப்பிற்கு அமைய கணினி துறையில் உள்ள
தொழில் வெற்றிடங்களிற்கு ஏற்ப வேலைவாய்ப்பற்ற, பாடசாலைக் கல்வி, பல்கலைக் கழக கல்வியில் சந்தர்ப்பத்தினை இழந்த, வறுமைக்கோட்டின் கீழ் வாழும் இளைஞர், யுவதிகளுக்கு கணினித் துறையில் பயிற்சியினை அளித்து தொழில் வழங்குவதற்கான செயற்பாட்டினை மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி மேற்கொண்டுள்ளது.

குறிப்பிட்ட துறையில் விற்பனராக பயிற்சிபெற்று, சிறந்த வருமானத்துடன் உங்கள் குடும்ப பொருளாதாரத்தில் மாற்றத்தினை ஏற்படுத்த துடிக்கும் தொழில் ஆர்வமுள்ள இளைஞர்கள், யுவதிகள் 15.09.2016 க்கு முன்னர் கல்லூரியினை தொடர்புகொள்ளவும்.

பயிற்சிகள் இலவசமாக நடைபெறுவதுடன், தொழிலுக்கான உத்தரவாதமும் அளிக்கப்படுகின்றது. நடைபெற இருக்கும் பயிற்சிநெறிகள் Computer Graphic Designer (NVQ Level 4), Computer Network Technician (NVQ Level 3) + CCTV + PABX


விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய முகவரி :

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி, பிரதான வீதி, புதுக்குடியிருப்பு. ஆரையம்பதி.


தொடர்புக்கு ; 065 4929509, 0752900390, vivekanandacot@gmail.com www.facebook.com/vctlk, விண்ணப்பத்தினை தரவிறக்கிக் கொள்ள, https://drive.google.com/file/d/0B1oVF1bfsUOhWklJcnhhRUFrRkU/view?usp=sharing


SHARE

Author: verified_user

0 Comments: