11 Aug 2016

நிலைமாறும் கிழக்கு பல்கலைக்கழகம்!

SHARE
(திலக்ஸ் ரெட்ணம்)

கிழக்குமாகாணத் தமிழர்களின் சிந்தனையில் உதயமான கிழக்குக்கான பல்கலைக்கழகம் ஒன்றின் தேவை முன்னை நாள் அமைச்சர் K.W.தெய்வநாயகம் அவர்களின் முயற்சியினால்
1986 ஆம் ஆண்டில் சாத்தியமானது.1981 ஆம் ஆண்டில் இருந்து வந்தாறுமூலையில் மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்ட இக் கலாசாலை பின்னர் பல்கலைக்கழகமாக பெயர்மாற்றம் பெற்றது.

பல ஏக்கர் பரப்பளவுகளைக் கொண்டு வந்தாறுமூலைக்கிராமத்துக்கு மட்டுமல்லாது மட்டக்களப்பின் பல பாகங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கல்விக்கண்திறந்த வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயமானது உயர்கல்வியின் தேவை கருதி  கிராமத்து மக்களாலும் அறிஞர்களாலும் பல்கலைக்கழகத்துக்கு தாரைவார்க்கப்பட்டது.

மொத்தத்தில்,கிழக்கு தமிழர்களுக்கான உயர்கல்வியின் அவசியம் பல கல்விமான்களால் உணரப்பட்டதாலும் சிறிமா அரசின் கல்விக் கொள்கைகளால் சினம் கொண்ட தமிழ் இளைஞர்கள் மத்தியில் உதயமாகி இருந்த தமிழ் மாணவர் பேரவை போன்ற அமைப்புக்களின் போராட்டங்களினாலும் தமிழர் மத்தியில் உருவாகியிருந்த விழிப்புணர்வு பாடசாலை ஒன்றை பல்கலைக்கழகத்துக்கு தாரைவார்க்க காரணமாய் அமைந்திருந்த்து.

ஆனால் 2009 ஆம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் இருந்து கிழக்குப் பல்கலைக்கழகமானது நோக்கம் மாறியதாக 1974 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்த கல்விக் கொள்கைக்கு ஒப்பான கொள்கை ஒன்றின் அடிப்படையில் பெரும்பான்மை இனத்துக்கே உரியதான பல்கலைக்கழகம் ஒன்றாக மாறிவருகிறது.
2009 ற்கு பின்னரான காலப்பகுதியில் இருந்து படிப்படியாக மாணவர் உள்ளீர்ப்பில் கொண்டுவரப்பட்ட மாற்றம் இன்று மிக பெரிதாக வியாபித்து சிங்களதேச பல்கலைக்கழகம் ஒன்றுக்கு ஒப்பீன மாணவர் எண்ணிக்கையை கொண்ட பல்கலைக்கழகம் ஒன்றாக மாற்றம் பெற்றுவிட்டது.

சிங்கள தேசம் ஒன்றின் பல்கலைக்கழகங்களில் தமிழ் மாணவர்கள் எந்தளவு விகிதாசாரத்தில் உள்ளீர்க்கப்படுகிறார்களோ,அதே நடைமுறை பின்பற்றப்படும் பல்கலைக்கழகம் ஒன்றாக தமிழர்தேச பல்கலைக்கழகம் மாற்றமடைந்துவிட்டது.
தற்போது கிழக்குப் பலகலைக்கழகத்தில் காணப்படும் அனைத்து பீடங்களிலும் 70 வீத்த்திற்கும் மேலாக சிங்கள மாணவர்கள் அனுமதிக்கப் பட்டிருப்பதுடன் கலைப்பீடத்திற்கு மட்டுமே தற்போதைய நிலையில் கணிசமான மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதனடிப்படையில் தற்போதைய காலகட்டத்தில் பல்கலைக்கழக்சூழலில் சிங்கள மாணவர்களே அதிகம்.அவர்களே அங்கு தீர்மானிக்கும் சக்தி.

இன்னும் சில காலங்களில்,தற்போது தமிழ் மொழியில் கற்கைகளை மேற்கொண்டுவரும் கலைப்பீடம் ஆங்கில மொழிக்கு மாற்றப்படவுள்ளது.இது தொடர்பான துரித செயற்பாடுகளை பல்கலைக்கழக நிருவாகமும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் மிக துரிதமாக முன்னெடுத்து வருகுன்றது.இதன்படி எதிர் காலத்தில் கலைப்பீடத்திற்கும் சிங்கள மாணவர்கள் மிக அதிகம் அனுமதிக்கப்படுவர்.

ஆகவே,தமிழர்களின் போராட்டம்,அர்ப்பணிப்புகள்,தியாகம் போன்றவற்றால் உருவாக்கப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழகம் இன்று சிங்களதேசம் ஒன்றின் பல்கலைக்கழகமாக மாறி சிங்கள கலை,இலக்கியங்கள்,கலாச்சாரம்,மதம் என்பவற்றின் அடையாளமாக தோற்றம்பெறவுள்ளது.

இதற்கான முன்னெடுப்புகள் கன கச்சிதமாகவும் மிக தீவிரமாகவும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.அண்மையில் பலத்த பாதுகாப்புகள் மற்றும் மத வழிபாடுகளுடன் வெள்ளரசு மரக் கன்றொன்று பல்கலைக்கழக வளாகத்தினுள் நடப்பட்டுள்ளது.2001 ஆம் ஆண்டில் கிழக்குப் பல்கலைக்கழக சமூகம் நடாத்திய பொங்குதமிழ் நிகழ்வை நினைவுகூரும் நடுகல் படிப்படியாக அமைப்பழிக்கப்பட்டு புத்தர்சிலை நிர்மாணத்துக்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.

சிங்கள தேச கலாச்சாரமும் பண்பாடுகளும் பகிடிவதை எனும் பெயரில் படிப்படியாக தமிழ்மாணவர்கள் மத்தியியில் வலுக்கட்டீயமாக இறிமுகப்படுத்தப்படுகிறது.தமிழ் மாணவர்களும் அவர்களது கலாச்சாரத்துக்கு பழக்கப்படும் அசாதாரண சூழல் தோன்றியுள்ளது.

பல்கலைக்கழக நிருவாகமோ இவற்றைக் கண்டுகொள்ளாது தமக்கிடையே பதவிகளுக்காகவும் வரப்பிரசாதங்களுக்காகவும் முட்டி மோதி நிற்கின்றனர்.இத்தகைய பதவி போராட்டத்தை தமக்கு சாதகமாக்கிக்கொள்ளும் சிங்கள மாணவர்கள் தமது அமைச்சர்கள் மூலமாக உயரதிகளை விலைக்கு வாங்கி பேசா மடந்தைகளாக்கிவிட்டனர்.

இதற்கான சிறந்த உதாரணமாக அண்மையில் சிங்கள மாணவர்களால் தாக்கப்பட்ட தமிழ் மாணவன் தொடர்பான விசாரணையை கொழும்புக்கு மாற்றியமையை கொள்ள முடியும். எனவே மட்டக்களப்பின் கல்விச் சமூகம் ஆபத்தை உணர்ந்து தமுழர்களுக்கான கல்விச்சாலையை பாதுகாக்க புறப்பட வேண்டும். கல்வியை அழித்தலும் ஒரு இனத்தின் மீதான திட்மிட்ட இனவழிப்பே!


SHARE

Author: verified_user

0 Comments: