மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப் பகுதியான போரதீவுப்பற்று பிரதேசத்தில் காட்டுயானைகள் ஊடுருவும் கிராமங்களை மையப்படுத்தி வீதி மின்விளக்குகள் பொருத்தப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட
உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல் செவ்வாய் கிழமை (19) தெரிவித்தார்.
இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்….
உலக தரிசனம் எனும் தன்னார்வ தொண்டர் அமைப்பின் உதவியுடனும், போரதீவுப் பற்று பிரதேச சபையின் ஒத்துழைப்புடனும், அப்பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட காட்டுயானைகள் உள்வரும் கிராமங்களை மையப்படுத்தில் இந்த வீதி மின்விளக்குகள் பொருத்தப்படவுள்ளன. இதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளை உலகதரிசன தொண்டர் அமைப்பும், போரதீவுப்பற்று பிரதேச சபையும், முன்னெடுத்துள்ளதாகவும், இதற்கான வேலைகள் புதன்கிழமை (20) ஆரம்பிக்கப்படும் எனவும், இவ்வாரத்திற்குள் குறித்த இடங்களில் வீதி மின் விளக்குகள் பொருத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் காட்டு யானைகள் உள்வரும் கிராமங்களை மையப்படுத்தி முதற்கட்டமாக 30 வீதி விளக்குகள் பொருத்துவதற்கு தமது நிறுவனம் முன்வந்துள்ளதாகவும், மேலும் தேவைகளை அறிந்து மின்விளக்குகள் பெற்றுக் கொடுக்கப்படும் எனவும், உலக தரிசன நிறுவனத்தின் அப்பிரதேச அபிவிருத்திட்ட முகாமையாளர் பி.றோகாஸ் தெரிவித்தார்.
போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் தொடர்ந்து காட்டுயானைகளின் அட்டகாசங்களும் தொல்லைகளும் அதிகதித்த வண்ணமுள்ளதனால் வீதி மின்விளக்குகளை அமைத்துத்தருமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ள போதிலும் அவை இதுவரையில் நடைமுறைப் படுத்தப் படவில்லை என அப்பகுதி மக்கள் அங்கலாய்த்து வருகின்றமையும் குறிப்பிடத் தக்கதாகும்.
0 Comments:
Post a Comment