வரையறுக்கப்பட்ட சேவை ஊழியர்களின் சிக்கன கடனுதவிச் சங்கத்தின் சங்க உறுப்பினர்களின் பல்கலை கழக அனுமதி பெற்ற மாணவ, மாணவிகளுக்கான புலமை பரிசில் வழங்கும் வைபவம் எதிர்வரும் சனிக் கிழமை (30.07.2016 மு.ப 10.00 மணிக்கு) மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு எல்லை வீதியில் அமைந்துள்ள வை.எம்.சீ.ஏ மண்டபத்தில் இடம் பெறவிருக்கும் இந் நிகழ்வுக்கு சங்கத்தின் உதவித்தலைவர் சுந்தரலிங்கம் பிரதிப் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
2013, 2014 ஆம் ஆண்டுகளில் பல்கலைக் கழக அனுமதி பெற்ற மாணவ மாணவிகளுக்கே குறித்த புலமைப்பரிசீல் வழங்கப்படவுள்ளதாகவும், கிழக்கு மாகாணத்தினை சார்ந்த மூன்று மாவட்டத்தில் இருந்தும் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளவுள்ளதாகவும் சங்கத்தின் கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான பணிப்பாளர் பி.செல்லத்துரை தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment