6 Jul 2016

நோயாளர்கள் நன்றி தெரிவிப்பதுடன், மனிதாபிமானம் இன்னும் மரணிக்கவில்லை என்கின்றனர்.

SHARE
(பழுவூரான்)

மட்டக்கள்பு போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சைக்கு அதிகாலை இரண்டு மணிமுதல் நோயாளர்கள் வருகை தருவதாகவும், அவ்வாறு வந்தாலும் நாளுக்கு 15 நோயாளர்களை மட்டுமே புதிதாக பார்வையிடுவதாகவும் அண்மையில் ஊடகம் ஒன்றில் செய்தி வந்திருந்தது.

இதனை அறிந்த பிரதான கண்வைத்திய நிபுணரான எஸ்.விக்கிரமசிங்க தனக்கு கீழான வைத்தியர்களையும தாதியர்களையும் இது குறித்து விளக்கம் கோரியுள்ளார்.அவர்கள் அனைவரும் குறித்த செய்தியை பொய் எனவும் நோயாளர்கள் காலை 5.30 ற்கு பின்பே கிளினிக் வருவதாகவும் வைத்திய நிபுணரிடம் கூறியுள்ளனர். அவர்களின் கூற்றில் நம்பிக்கை கொள்ளாத நிபுணர் 05.07.2016 அதிகாலை 4.30 மணிக்கு கண் சிகிச்சைக்கான கிளினிக் நடைபெறும் இடத்திற்கு சென்று அங்கேயே   காலை 5.30 மணி வரையும் அமர்ந்திருந்துள்ளார். அதனடிப்படையில் அங்கே 13 நோயாளர்கள் அதிகாலை முதலே வருகை தந்திருந்துள்ளனர்.

குறித்த காட்சியை கண்ட நிபுணர் தனக்கு கீழான சகல ஊழியர்களையும் கடுமையான தொனியில் எச்சரித்துடன் இனி வரும் காலங்களில் காலை 8.30 மணி வரையும் சிகிச்சைக்காக வருகை தரும் அனைத்து கண் நோயாளர்களையும் கண்டிப்பாக பார்வையிடவேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்துள்ளார். குறித்த கண் வைத்திய நிபுணரை நாம் பாராட்டுவதுடன் மனிதாபிமானம் இன்னும் மரணிக்கவில்லை என்று அங்கு வருகை தந்த கண்நோயாளர்கள் தெரிவித்தனர்.

SHARE

Author: verified_user

0 Comments: