எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி தொடக்கம் 29ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ள ‘ஆசிய ஹோட்டல் மற்றும் சுற்றுலாத்துறை மாநாட்டுக்கான (AHTIC மாநாடு) உத்தியோகபூர்வ இணையதளம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் செவ்வாய் கிழமை (05) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி வாசஸ்தலத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, இம்மாநாட்டுக்கான ஆரம்ப நிகழ்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் நடுப்பகுதியில் டுபாயில் நடைபெற்றிருந்தது. இந்நிகழ்வுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகவும், இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் சிறப்பதிதியாகவும் அழைக்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் சுற்றுலாத்துறை என்பது மிகமுக்கிய பங்கு வகிக்கின்றது. இத்துறையை மேலும் அபிவிருத்தி செய்வதாயின் இவ்வாரான மாநாடுகள் இடம்பெற வேண்டும். இம்மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.இது எமக்கு சிறந்ததோர் வாய்ப்பாகும்- என்றார்.
0 Comments:
Post a Comment